Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, February 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»‘இந்திய ராணுவ தாக்குதலில் 26 பேர் பலி; இது போர் நடவடிக்கையே!” – பாகிஸ்தான் சொல்வது என்ன?
    உலகம்

    ‘இந்திய ராணுவ தாக்குதலில் 26 பேர் பலி; இது போர் நடவடிக்கையே!” – பாகிஸ்தான் சொல்வது என்ன?

    adminBy adminMay 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘இந்திய ராணுவ தாக்குதலில் 26 பேர் பலி; இது போர் நடவடிக்கையே!” – பாகிஸ்தான் சொல்வது என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    இஸ்லாமாபாத்: ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை கடுமையாக விமர்சித்துள்ள பாகிஸ்தான், ‘இந்தியாவின் தாக்குதல் என்பது அப்பட்டமான போர் நடவடிக்கை. இந்தியாவின் இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். 46 பேர் காயமடைந்தனர். இந்தப் போர் நடவடிக்கைக்கு பதிலடி தரும் உரிமை உண்டு’ என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் ஆயுதங்களை நிலைநிறுத்தி, சர்வதேச எல்லைப் பகுதியில் உள்ள மக்களை குறிவைத்துத் தாக்கியது பாகிஸ்தானின் இறையாண்மையை மீறிய செயலாகும். ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் பிரிவு 51 மற்றும் சர்வதேச சட்டங்களின்படி, தேவையான நேரத்தில் திருப்பித் தாக்கும் உரிமை என்பது பாகிஸ்தானுக்கும் உண்டு. இந்தத் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட பொது மக்கள் கொல்லப்பட்டதற்கு இந்தியாவே காரணம்’ என்று தெரிவித்துள்ளது.

    உயிரிழப்பு விவரம்: மேலும், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்துக்கு பாகிஸ்தான் தனியாக சம்மன் அனுப்பி இந்தியாவின் தாக்குதலுக்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அத்துடன், இந்தத் தாக்குதல் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. ‘இந்தியாவின் தாக்குதல் என்பது அப்பட்டமான போர் நடவடிக்கை. இந்தியாவின் இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். 46 பேர் காயமடைந்தனர்’ என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    அதேவேளையில், இந்தியா – பாகிஸ்தானின் சர்வதேச எல்லைப் பகுதியான எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு (எல்ஓசி) அருகே வெடிகுண்டுகள் வீசி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் இந்தியக் குடிமக்கள் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக இந்திய ராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஆபரேஷன் சிந்தூர் – முன்னதாக, ‘இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையைத் தொடங்கி, பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு – காஷ்மீர் பகுதியிலும் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளைத் தாக்கின. மொத்தத்தில் 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டன. இந்தியாவின் நடவடிக்கைகள் துல்லியமானவை. அத்துமீறல் இல்லாதவை.

    இந்தத் தாக்குதலில் எந்த பாகிஸ்தானிய ராணுவ நிலைகளும் குறிவைக்கப்படவில்லை. இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும், தாக்குதலை செயல்படுத்தும் முறையிலும் இந்தியா நிதானத்தைக் கடைபிடித்துள்ளது. 25 இந்தியர்களும், ஒரு நேபாளத்தைச் சேர்ந்தவரும் கொல்லப்பட்ட இரக்கமற்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற உறுதிமொழி நிறைவேற்றப்படும்’ என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. அதன் விவரம்: ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாக். பயங்கரவாத முகாம்கள் மட்டுமே குறிவைத்து அழிப்பு: மத்திய அரசு விவரிப்பு



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ஜெஃப்ரி எப்ஸ்டீன் தனது காபியை எப்படி தயாரிக்கிறார் என்பதை DOJ கோப்புகள் வெளிப்படுத்துகின்றன, முழு படிப்படியான வழிகாட்டி உள்ளே | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 13, 2026
    உலகம்

    ஆல்பர்ட் பைக்கின் கட்டுக்கதை: 19 ஆம் நூற்றாண்டின் ஃப்ரீமேசன் இஸ்லாத்திற்கும் சியோனிசத்திற்கும் இடையிலான 3 ஆம் உலகப் போரை உண்மையில் முன்னறிவித்தாரா? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 12, 2026
    உலகம்

    பயத்திலிருந்து முதல் வீட்டிற்கு: இந்திய வம்சாவளி மருத்துவர் அமெரிக்காவில் தாயின் குடியேறிய வெற்றிப் பயணத்தைப் பகிர்ந்து கொள்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 11, 2026
    உலகம்

    பொய்யான வால்மார்ட் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் வழக்குத் தாக்கல் செய்தார்: ‘என் வாழ்க்கையின் மிகப்பெரிய தலைவலி’ – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 11, 2026
    உலகம்

    ‘கோ பேக் டு இந்தியா’, ‘டை நாஜி’: மெல்போர்ன் அப்பா காரை சுத்தம் செய்யும் போது இனவெறிக் குறிப்புகளைக் கண்டார்; இத்தகைய தாக்குதல்களுக்கு எந்த காரணமும் இல்லை – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 10, 2026
    உலகம்

    ‘நீங்கள் மருத்துவத்தில் தோல்வியடைந்தீர்கள், மனிதநேயம்’: எப்ஸ்டீனின் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்த மகளிர் மருத்துவ நிபுணர்களை இந்திய வம்சாவளி மருத்துவர் வெடிக்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆதித்யா பாண்டியாவை சந்தியுங்கள்: சந்திரன் போன்ற வாழ்விடத்தை வாழ்ந்து, வடிவமைத்து, சோதித்த இந்தியாவின் இளைய அனலாக் விண்வெளி வீரர் ஆனார் 17 வயது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சூஃபி பாரம்பரிய விழா 2026 டெல்லிக்குத் திரும்புகிறது: தலேர் மெஹந்தி, சோனா மொஹபத்ரா வரிசையில்; தேதிகள் மற்றும் பிற விவரங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • NASA SpaceX Crew 12 ஏவுதல் சுற்றுப்பாதையை அடைந்து ISS | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “தெருக்களில் யானைகள் மற்றும் துரும்புகள்… போதையில் நரகம் போல் காட்சியளித்தன”: இந்த வெளிநாட்டு பயணி அசௌகரியத்தை ஏற்படுத்திய அனுபவம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வானியலாளர்கள் பால்வீதியில் சூரிய குடும்பத்தை கண்டுபிடித்துள்ளனர், இது கிரக உருவாக்கம் விதிகளை மீறுகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.