நியூயார்க்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் கொரிய அதிபருடனான சந்திப்பின் போது, இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சண்டை குறித்து டொனால்டு ட்ரம்ப் கூறியதாவது: உலகின் பல போர்களை நான் நிறுத்தியுள்ளேன். இந்தியா, பாகிஸ்தான் இடையே மிகப்பெரிய போர் ஏற்பட்டிருக்கும். இதுவரை இந்தியா – பாகிஸ்தான் போர் உட்பட 7 போர்களை நிறுத்தியுள்ளேன்.
இந்தியா, பாகிஸ்தான் இடையே ஆயுதப் போராகவும் வெடிப்பதற்கு நேர்ந்தது. அப்போது ‘நீங்கள் எங்களுடன் வர்த்தகம் மேற்கொள்ள விரும்புகிறீர்களா? இல்லையா? இப்படி நீங்கள் சண்டையிட்டுக்கொண்டால், உங்களுடன் எந்தவிதமான வர்த்தகமும் மேற்கொள்ள மாட்டோம்’ என்றோம். சண்டையை நிறுத்த வர்த்தகத்தை பயன்படுத்தினேன், நான் நிறுத்திய 7 போர்களில் 4 போர்கள், வர்த்தகம் மற்றும் வரிவிதிப்பு அச்சங்களால் நிறுத்தப்பட்டவை. அவர்கள் போரைக் கைவிட்டுவிட்டனர். போர்களை நிறுத்தியதன் மூலம் கோடிக்கணக்கான டாலரை வரிவிதிப்பாக நாங்கள் பெற்றோம். இவ்வாறு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.