Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, April 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»‘இந்தியாவை சமாதானப்படுத்த ட்ரம்ப் உதவ வேண்டும்’ – பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கோரிக்கை
    உலகம்

    ‘இந்தியாவை சமாதானப்படுத்த ட்ரம்ப் உதவ வேண்டும்’ – பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கோரிக்கை

    adminBy adminJune 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘இந்தியாவை சமாதானப்படுத்த ட்ரம்ப் உதவ வேண்டும்’ – பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கோரிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வாஷிங்டன்: பயங்கரவாத பிரச்சினையில் உலகளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவுடன் சமாதானத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உதவ வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

    இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்தியாவுடனான சிக்கல்களை தணிப்பதில் ட்ரம்பின் பங்கைப் பாராட்டினார். மேலும், அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளுக்கு இடையேயான உரையாடலை ஊக்குவிப்பதில் அமெரிக்கா மிகவும் தீவிரமான பங்கை வகிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    இரு நாடுகளுக்கும் இடையிலான விரோதப் போக்கை நிறுத்துவதற்கு உதவியதற்காக ட்ரம்ப் “புகழ் பெறத் தகுதியானவர்” என்று முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி கூறியதை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் எதிரொலித்தார்.

    முன்னதாக பிலாவல் பூட்டோ வெளியிட்ட கருத்தில், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை எளிதாக்கியதற்காக 10 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் டொனால்ட் ட்ரம்ப் பெருமை சேர்த்துள்ளார். போர் நிறுத்தத்தை சாத்தியமாக்க உதவியது அவரது முயற்சிகள் என்பதால் அவருக்கு அந்தப் பெருமை உரியது. எனவே, இந்தப் போர் நிறுத்தத்தைப் பேணுவதில் பாகிஸ்தானுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருந்தால், ஒரு விரிவான உரையாடலை ஏற்பாடு செய்வதில் அமெரிக்காவின் பங்கு நமக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்ப்பது நியாயமானது” என்று அவர் கூறினார்.

    போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை என இந்தியா பகிரங்கமாக மறுத்து வருகிறது. மேலும், இருதரப்பு பிரச்சினைகளில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தையும் இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது.

    இதுகுறித்து பேசிய அமெரிக்காவிற்கான அனைத்துக் கட்சிக் குழுவை வழிநடத்தும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், “எங்கள் தலையில் துப்பாக்கியை நீட்டி பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்ற தெளிவான நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது என்பதை அமெரிக்கா புரிந்துகொண்டுள்ளது என்று நான் நினைக்கிறேன். பாகிஸ்தான் தூதுக்குழு நாங்களும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. அது யாருடைய தவறு?. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஹிலாரி கிளிண்டன் கூறியது போல். உங்கள் கொல்லைப்புறத்தில் விரியன் பாம்புகளை வளர்த்து, அவை உங்கள் அண்டை வீட்டாரை மட்டுமே கடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது” என்று கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    டாக்டர் அசோக் ஜெயின் யார்? தனது ராஜஸ்தான் கிராமத்தில் $750,000 மதிப்பில் பள்ளியை கட்டிய இந்திய வம்சாவளி குழந்தை மருத்துவர் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 6, 2026
    உலகம்

    அமெரிக்க விமானப்படை மோசடி வழக்கு: டெக்சாஸ் நபர் $37 மில்லியன் அமெரிக்க விமானப்படை மோசடியில் குற்றத்தை ஒப்புக்கொண்டார், ‘காட்பாதர்’ மற்றும் ‘அல் கபோன்’ ஆகியோருக்கு லஞ்சம் கொடுத்தார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 6, 2026
    உலகம்

    துபாய் செய்திகள்: பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில் துபாய் சுற்றுலாத் தலைவர் பயணிகளை நகரத்திற்கு வரவேற்கிறார்: ‘துபாய் திறந்திருக்கிறது’ – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 6, 2026
    உலகம்

    இந்திய வம்சாவளி மருத்துவர் அமெரிக்காவில் தன் மீதான குற்றச்சாட்டுகளை தீர்க்க $14 மில்லியன் செலுத்த வேண்டும்; தேவையற்ற நடைமுறைகளைச் செய்தது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 6, 2026
    உலகம்

    90 வயதான ஓஹியோ பெண், ‘அது சாத்தியமற்றது போல் இல்லை’ என்று கூறி, இறந்ததற்காக கின்னஸ் சாதனையை முறியடித்தார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 5, 2026
    உலகம்

    முன்னாள் அமெரிக்க காங்கிரஸார் கூறுகையில், ‘ஏலியன்கள் மனிதர்களுடன் சேர்ந்து இனப்பெருக்கம் செய்கின்றனர்’ என ராணுவ வட்டாரம் தன்னிடம் கூறியதாக | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கோடையில் உங்கள் சமையலறையை குளிர்ச்சியாக வைத்திருப்பது எப்படி: வேலை செய்யும் எளிய குறிப்புகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நாய்க்குட்டி யோகாவின் நன்மைகள்: நாய்க்குட்டி யோகா என்றால் என்ன, அது எவ்வாறு உதவுகிறது? நன்மைகள், மனநல பாதிப்பு மற்றும் ஒரு அமர்வில் என்ன எதிர்பார்க்கலாம் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உத்திரபிரதேசத்தில் உள்ள அம்ரோஹாவில் முகமது ஷமியின் ₹15 கோடிக்கும் மேலான விசாலமான பண்ணை வீடு மாம்பழத் தோட்டங்கள், கிரிக்கெட் பயிற்சி மைதானங்கள் மற்றும் கிராமப்புற வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றியது.
    • ட்ரோன் காட்சிகள் அமேசானின் கடைசி தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடியினரின் அரிய காட்சியை வெளிப்படுத்துகின்றன | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • செஃப் ரன்வீர் பிராரின் எழுச்சியூட்டும் பயணம்: உடைந்து பெஞ்சுகளில் தூங்குவது முதல் பிரபல சமையல்காரர் வரை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • April 2026
    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.