Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, March 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»இந்தியாவுடன் வர்த்தக உறவை அதிகரிக்க விரும்பும் 50% பாகிஸ்தானியர்கள்
    உலகம்

    இந்தியாவுடன் வர்த்தக உறவை அதிகரிக்க விரும்பும் 50% பாகிஸ்தானியர்கள்

    adminBy adminMay 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்தியாவுடன் வர்த்தக உறவை அதிகரிக்க விரும்பும் 50% பாகிஸ்தானியர்கள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    இஸ்லாமாபாத்: இருதரப்பு உறவுகளை இயல்பாக்குவதற்காக இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை அதிகரிக்க வேண்டும் என்று 49% பாகிஸ்தானியர்கள் தெரிவித்திருப்பதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இம்மாதம் 7ம் தேதி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் எனும் ராணுவ நடவடிக்கையை எடுத்தது. 9 பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது.

    இந்த சம்பவத்தை அடுத்து இரு நாடுகளுக்கு இடையே ராணுவ மோதல் ஏற்பட்டு, 4 நாட்களுக்குப் பிறகு அது முடிவுக்கு வந்தது. ராணுவ மோதல் மே 10ம் தேதி முடிவுக்கு வந்த நிலையில், மே 12 முதல் 18 வரை பாகிஸ்தான் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் நூறு பேரிடம் சர்வே எடுக்கப்பட்டது. கேலப் பாகிஸ்தான் (Gallup Pakistan) நடத்திய இந்த சர்வேயில், இந்தியா – பாகிஸ்தான் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டுள்ளன.

    அது குறித்து தி நியூஸ் இன்டர்நேஷனல் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, போர் நிறுத்தத்திற்குப் பிறகு உறவுகளை இயல்பாக்குவதற்கு இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை அதிகரிக்க 49% சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும், 35% பாகிஸ்தானியர்கள் இதனை எதிர்க்கின்றனர். நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் முதலில் தீர்க்க வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.

    இந்தியாவுடனான உறவுகளை சீராக்க இந்தியா உடனான விளையாட்டுப் போட்டிகளை அதிகரிக்க வேண்டும் என்று 48% பாகிஸ்தானியர்கள் தெரிவித்துள்ளனர். 35% பேர் இதனை எதிர்த்துள்ளனர்.

    கல்வித் துறையில் ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும் என்று 44% பாகிஸ்தானியர்கள் விருப்பம் தெரிவித்துள்ள அதே நேரத்தில் 36% பேர் இந்த திட்டத்தை எதிர்த்துள்ளனர். கலாச்சார உறவுகளை அதிகரிப்பதற்கு நாற்பது சதவீதம் பேர் ஆதரவும், 35% பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

    “நீங்கள் 1947 இல் இருந்திருந்தால், இந்தியாவிலிருந்து பிரிவதற்கு ஆதரவாக இருந்திருப்பீர்களா” என்ற கேள்விக்கு, 86% பேர் இந்தியாவிலிருந்து பிரிவதற்கு ஆதரவாக வாக்களித்திருப்போம் என்று தெரிவித்துள்ளனர். மூன்று சதவீதம் பேர் அதை எதிர்த்திருப்போம் என்று கூறியுள்ளனர். 7 சதவீதம் பேர் இதைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது என்றும், 4% பேர் எந்த கருத்தும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ரிஷி கபூர் குற்றஞ்சாட்டப்பட்டார்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் டெவலப்பர் ரிஷி கபூர், மியாமியில் 68-அடி சொகுசு படகு வாங்குவதற்காக $85 மில்லியன் மோசடித் திட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 14, 2026
    உலகம்

    ‘ஊழல், ஆபத்தான நிர்வாகம்’: டிரம்பின் மதக் குழுவில் உள்ள ஒரே முஸ்லிம் பெண் எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 13, 2026
    உலகம்

    இந்திய வம்சாவளி அதிகாரிகள்: “முழுமையாக இந்தியர்களால் நடத்தப்படுகிறதா?”: கனேடிய தலைவர் அரசாங்க நிறுவனத்தில் இந்திய வம்சாவளி உறுப்பினர்களை அழைத்ததற்காக பின்னடைவை எதிர்கொள்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 12, 2026
    உலகம்

    பென்சில்வேனியாவில் ஹெச்-1பி விசா மோசடி, ஹெல்த்கேர் ஊழல் போன்றவற்றில் தண்டனை பெற்ற காஷ் படேலைச் சந்தித்ததைப் பற்றி தற்பெருமை காட்டிய இந்திய வம்சாவளி சகோதரர்கள்; 400 ஆண்டுகள் சிறைத்தண்டனை – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    இங்கிலாந்தின் வெம்ப்லியில் உள்ள இந்திய கடைகள், உணவகங்கள் இலக்கு தாக்குதல்களில் நாசமாக்கப்பட்டன – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    அன்னா லீ வாட்டர்ஸ் யார்? 19 வயதான பிக்கிள்பால் நட்சத்திரம் அடுத்த மாதம் சர்வதேச அறிமுகத்திற்குத் தயாராக உள்ளது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பா ஒரு காலத்தில் தரை வழிகள் மூலம் இணைக்கப்பட்டன: 120 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் புதைபடிவத்தை வெளிப்படுத்துகிறது பண்டைய பாலம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எல்பிஜியை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு எது, இந்திய குடும்பங்களுக்கு அது என்ன? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் வீரர் அக்சர் படேலின் மனைவி மேஹா படேலை சந்திக்கவும்: சிறுவயது நட்பு முதல் வாழ்க்கை துணை வரை– அவர்களின் காதல் கதை
    • ‘Caulocera Hollowayi மற்றும் Asura Buxa’: இந்திய விஞ்ஞானிகள் இரண்டு புதிய லிச்சென் அந்துப்பூச்சி இனங்களை கண்டுபிடித்துள்ளனர் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கிரீன் கார்டு லாட்டரி விதிகளை அமெரிக்கா கடுமையாக்குகிறது; இந்த தேதியிலிருந்து பாஸ்போர்ட் பதிவேற்றம் தேவை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.