Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, February 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்: அமெரிக்க தாக்குதலில் ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிப்பு – நடந்தது என்ன?
    உலகம்

    ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்: அமெரிக்க தாக்குதலில் ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிப்பு – நடந்தது என்ன?

    adminBy adminJune 23, 2025No Comments4 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்: அமெரிக்க தாக்குதலில் ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிப்பு – நடந்தது என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    டெஹ்ரான்: அமெரிக்க போர் விமானங்​கள், நீர்​மூழ்​கி​ கப்பல்களில் இருந்து சரமாரியாக குண்டுகள், ஏவுகணைகளை வீசி நடத்​தப்பட்ட தாக்குதலில், ஈரானின் 3 அணுசக்தி தளங்​கள் முற்​றி​லு​மாக அழிக்​கப்​பட்​டன.

    ஈரானிடம் 10-க்​கும் மேற்​பட்ட அணுகுண்​டு​கள் தயாரிக்க தேவை​யான யுரேனி​யம் இருப்​ப​தாக கணக்​கிடப்​பட்​டுள்​ளது. ஈரானிடம் உள்ள யுரேனி​யம் தற்​போது 87 சதவீதம் அளவுக்கு செறிவூட்​டப்​பட்டு இருப்​ப​தாக கூறப்​படு​கிறது. யுரேனி​யத்தை சுமார் 90 சதவீதம் அளவுக்கு செறிவூட்​டி​னால் அணுகுண்​டு​களை தயாரிக்க முடி​யும். இதற்​கிடையே, அமெரிக்க அதிப​ராக டொனால்டு ட்ரம்ப் பதவி​யேற்ற பிறகு, ஈரானின் அணுசக்தி திட்​டங்​கள் தொடர்​பாக அந்த நாட்​டுடன் பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்​டது. பேச்​சு​வார்த்தை பல மாதங்​கள் நீடித்​தும், எந்த உடன்​பாடும் எட்​டப்​பட​வில்​லை.

    இந்த சூழலில், அமெரிக்​கா​வின் நட்பு நாடான இஸ்​ரேல் கடந்த 13-ம் தேதி ஈரானின் அணுசக்தி தளங்​களை குறி​வைத்து திடீர் தாக்​குதல் நடத்​தி​யது. 40-க்​கும் மேற்​பட்ட இஸ்​ரேலிய போர் விமானங்​கள் ஈரானின் நடான்ஸ் நகரில் பூமிக்கு அடி​யில் செயல்​பட்ட அணுசக்தி தளம் மீது சரமாரி​யாக தாக்​குதல் நடத்​தின. ஈரான் தலைநகர் டெஹ்​ரானில் உள்ள அணுசக்தி ஆராய்ச்சி மையம், இஸ்​ப​கான் நகரில் உள்ள அணுசக்தி தொழில்​நுட்ப மையம், அராக் நகரில் உள்ள கனநீர் அணு உலை மையம் ஆகியவை மீதும் சக்​தி​வாய்ந்த குண்​டு​கள் வீசப்​பட்​டன. இஸ்​ரேலின் தாக்​குதலில் ஈரானின் அணுசக்தி விஞ்​ஞானிகள் 14 பேர் உயி​ரிழந்​தனர்.

    இதற்கு பதிலடி​யாக, ஈரானும் இஸ்​ரேல் மீது தாக்​குதல் நடத்​தி​யது. இதை தொடர்ந்​து, இஸ்​ரேல் – ஈரான் இடையே கடும் போர் மூண்​டது. இரு நாடு​களும் கடந்த 10 நாட்​களாக அதிதீ​விர போரில் ஈடு​பட்டு வரு​கின்​றன. ஈரானின் போர்டோ நகரில் மலைக்கு அடி​யில் சுமார் 90 மீட்​டர் ஆழத்​தில் அணுசக்தி தளம் செயல்​பட்டு வந்​தது. இது ஈரானின் அணுசக்தி கோட்டை என்று அழைக்​கப்​பட்​டது.

    இந்த தளம் மீது சரமாரி​யாக குண்​டு​கள், ஏவு​கணை​களை வீசி இஸ்​ரேல் போர் விமானங்​கள் தாக்​குதல் நடத்​தின. ஆனால், மலைக்கு அடி​யில் அணுசக்தி தளம் இருந்​த​தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்​பட​வில்​லை. ‘பூமியை துளைக்​கும் சக்தி வாய்ந்த அமெரிக்க ராணுவத்​தின் ஜிபி​யு-57 பங்​கர் வெடிகுண்டு மூலம் தாக்​குதல் நடத்​தி​னால் மட்​டுமே போர்டோ அணுசக்தி தளத்தை அழிக்க முடி​யும்’ என்று நிபுணர்​கள் தெரி​வித்​தனர்.

    ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ – இந்த சூழலில், ஈரான் மீது அமெரிக்கா நேற்று நேரடி தாக்​குதலில் ஈடு​பட்​டது. ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ (Operation Midnight Hammer) என்ற பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    அமெரிக்க விமானப் படை​யின் பி-2 ரகத்தை சேர்ந்த 7 போர் விமானங்​கள் நேற்று அதி​காலை ஈரானின் போர்டோ அணுசக்தி தளத்தை குறி​வைத்து ஜிபி​யு-57 பங்​கர் ரக வெடிகுண்​டு​களை வீசின. ஒவ்​வொரு விமான​மும் தலா 2 குண்​டு​கள் என மொத்​தம் 14 குண்​டு​களை வீசின. இவை 90 மீட்​டர் ஆழத்​துக்கு பூமியை துளைத்து சென்​று, வெடித்து சிதறின. இதில், போர்டோ அணுசக்தி தளம் முற்​றி​லு​மாக சேதமடைந்​தது.

    ஈரானின் நடான்​ஸ், இஸ்​ப​கான் நகரங்​களில் உள்ள அணுசக்தி தளங்​கள் மீதும் பி-2 போர் விமானங்​கள், ஜிபி​யு-57 பங்​கர் வெடிகுண்​டு​களை வீசின. அதே​நேரம், சுமார் 400 மைல் தூரத்தில் கடலுக்கு அடி​யில் முகாமிட்​டிருந்த அமெரிக்க கடற்​படை​யின் நீர்​மூழ்​கி​ கப்பல்களில் இருந்து 30 டோமஹாக் ரக ஏவு​கணை​கள் சீறி பாய்ந்​தன. இந்த ஏவு​கணை​களும் நடான்​ஸ், இஸ்​ப​கான் அணுசக்தி தளங்​களை அடுத்​தடுத்து தாக்​கின. அமெரிக்க போர் வி​மானங்​கள், நீர்​மூழ்​கி​களின்​ தாக்​குதல்​களால்​ ஈரானின்​ 3 அணுசக்​தி தளங்​களும்​ முற்​றி​லு​மாக அழிக்கப்பட்டுள்​ளன.

    ட்ரம்ப் எச்சரிக்கை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று கூறியதாவது: அணு ஆயுதங்களை தயாரிப்பதற்காக ஈரானின் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் அணுசக்தி தளங்களில் யுரேனியம் செறிவூட்டப்பட்டு வந்தது. ஈரான் அணுகுண்டு தயாரித்தால், மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும். எனவே, ஈரானின்3 அணுசக்தி தளங்கள் மீதும் அமெரிக்க ராணுவம் துல்லியதாக்குதல் நடத்தியது. இதில், 3 தளங்களும் அழிக்கப்பட்டுள்ளன. ஈரான் உடனே அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும். இல்லாவிட்டால், அந்த நாட்டின் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படும்.

    ‘அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை அழிப்போம்’ என்று ஈரான் கடந்த 40 ஆண்டுகளாக மிரட்டி வருகிறது. ஈரானின் தாக்குதலால் மத்திய கிழக்கில் ஆயிரக்கணக்கானோரை இழந்துள்ளோம். இனிமேலும் ஈரானின் அத்துமீறல்களை சகித்துக்கொள்ள முடியாது. ஈரான் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க போர் விமானிகளை பாராட்டுகிறேன்.

    உலகின் வேறு எந்த ராணுவத்தாலும் இதுபோன்ற தாக்குதல்களை நடத்த முடியாது. ஈரானின் அணுசக்தி தளங்களை அழித்த இஸ்ரேல் ராணுவத்தையும் பாராட்டுகிறேன். இவ்வாறு ட்ரம்ப் கூறினார். இதுபற்றி ஈரான் அதிபர் பெசெஷ்கியன் கூறும்போது, ‘‘அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். இக்கட்டான நேரத்தில் ஈரான் மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். எந்த சக்தியாலும் நம்மை தடுக்க முடியாது’’ என்றார்.

    அணு கதிர்வீச்சு அபாயம் இல்லை: ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் அணு கதிர்வீச்சு அபாயம் இல்லை என்று சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது. ஈரானின் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் ஆகிய3 இடங்களில் உள்ள அணுசக்தி தளங்களை அமெரிக்கபோர் விமானங்கள் குண்டு வீசி அழித்தன. இதனால் அணு கதிர்வீச்சு ஏற்படும் என்ற அச்சம் எழுந்தது.

    இதுகுறித்து சர்வதேச அணுசக்தி முகமை வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் தாக்கப்பட்டுள்ளன. எனினும், அணு கதிர்வீச்சு அளவு அதிகரிக்கவில்லை. ஈரானின் நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.

    அதேபோல, ‘சவுதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளில் அணு கதிர்வீச்சு அபாயம் இல்லை.மக்கள் அச்சப்பட வேண்டாம்’ என்று சவுதி அரேபியாவின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகளில் அணு கதிர்வீச்சு அபாயம் இல்லை என்று கத்தார், குவைத், எகிப்து உள்ளிட்ட நாடுகளின் அணுசக்தி ஆணையங்கள், வளைகுடா கூட்டமைப்பு கவுன்சில் ஆகியவையும் தெரிவித்துள்ளன.

    பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் ஆலோசனை: இஸ்ரேல் – ஈரான் போர் கடந்த 10 நாட்களாக நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா நேற்று நேரடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன.

    இந்த நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதுதொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசியில் பேசினேன். தற்போதைய சூழல் குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தோம்.

    சமீபகால பதற்றங்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தேன். பதற்றத்தை தணிப்பது, அமைதி பேச்சுவார்த்தை, ராஜதந்திர முயற்சிகள் மூலம் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினேன்.

    ஈரானில் தங்கியிருந்த இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்காக அதிபர் மசூத் பெசெஷ்கியனுக்கு நன்றி தெரிவித்தேன். வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் தொடர்ந்து இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும் என்றும் உறுதி மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    ஈரானில் உள்ள சபஹர் துறைமுகத்தை இந்தியா 10 ஆண்டு குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்த துறைமுகத்தில் இந்திய தரப்பில் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், இஸ்ரேலுடனும் இந்தியாவுக்கு மிக நெருங்கிய உறவு நீடிக்கிறது. பாதுகாப்பு, வர்த்தகம் உட்பட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன.

    இரு நாடுகள் இடையிலான போர் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோர் பிரதமர் மோடியிடம் ஏற்கெனவே தொலைபேசியில் பேசியுள்ளனர். இந்த சூழலில், போர் தீவிரமடைந்து, ஈரான் மீது அமெரிக்கா நேரடி தாக்குதலில் ஈடுபட்ட நிலையில்,பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ‘கோ பேக் டு இந்தியா’, ‘டை நாஜி’: மெல்போர்ன் அப்பா காரை சுத்தம் செய்யும் போது இனவெறிக் குறிப்புகளைக் கண்டார்; இத்தகைய தாக்குதல்களுக்கு எந்த காரணமும் இல்லை – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 10, 2026
    உலகம்

    ‘நீங்கள் மருத்துவத்தில் தோல்வியடைந்தீர்கள், மனிதநேயம்’: எப்ஸ்டீனின் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்த மகளிர் மருத்துவ நிபுணர்களை இந்திய வம்சாவளி மருத்துவர் வெடிக்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 9, 2026
    உலகம்

    பரபரப்பான டொராண்டோ மாலுக்கு வெளியே இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் கொல்லப்பட்டார், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைப் பற்றி காவல்துறைக்கு துப்பு இல்லை – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 9, 2026
    உலகம்

    சிங்கப்பூரில் புறாக்களுக்கு உணவளித்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு ரூ.2 லட்சம் அபராதம்; அவள் வேலையில்லாதவள், சமூக சேவை செய்வேன் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 9, 2026
    உலகம்

    டோனி ஹாக்கின் திருமணம் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தீவில் நடந்ததா? ஸ்கேட்போர்டிங் லெஜண்ட் பதிலளிக்கிறார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 8, 2026
    உலகம்

    “இஸ்லாம் இடம்பெயர்வு மீது கட்டமைக்கப்பட்ட மதம்”: NYC மேயர் மம்தானி குடியேற்றத்தைப் பற்றி பேசும் போது நபிகள் நாயகத்தின் ஹிஜ்ரத்தை அழைக்கிறார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • எலோன் மஸ்க் செவ்வாய் கிரகத்தை விட சந்திரனை முதன்மைப்படுத்துகிறார்; “SpaceX நிலவில் சுயமாக வளரும் நகரத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தியுள்ளது” | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தரும் 5 சதைப்பற்றுள்ள உணவுகள்
    • வீடுகள் மற்றும் தோட்டங்களுக்கு பாம்புகளை ஈர்க்கும் இடம் எது, அவை மறைந்திருக்கும் இடங்கள் என்ன? – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தீவிர உறவைத் தொடங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய 5 எச்சரிக்கை அறிகுறிகள்
    • ‘கோ பேக் டு இந்தியா’, ‘டை நாஜி’: மெல்போர்ன் அப்பா காரை சுத்தம் செய்யும் போது இனவெறிக் குறிப்புகளைக் கண்டார்; இத்தகைய தாக்குதல்களுக்கு எந்த காரணமும் இல்லை – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.