Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, February 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: லித்தியம் சுரங்கங்கள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை
    உலகம்

    அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: லித்தியம் சுரங்கங்கள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை

    adminBy adminJuly 6, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: லித்தியம் சுரங்கங்கள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பியூனஸ் அயர்ஸ்: அர்​ஜென்​டினா அதிபர் சேவியர் மிலேயை பிரதமர் மோடி நேற்று சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது அர்​ஜென்​டி​னா​வில் லித்​தி​யம் சுரங்​கங்​களை அமைப்​பது குறித்து பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்​டது.

    பிரதமர் நரேந்​திர மோடி நேற்று அர்​ஜென்​டினா தலைநகர் பியூனஸ் அயர்​ஸுக்கு சென்​றார். விமான நிலை​யத்​தில் ஏராள​மான இந்​தி​யர்​கள், அவரை உற்​சாக​மாக வரவேற்​றனர்.

    இதுகுறித்து பிரதமர் மோடி சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “பியூனஸ் அயர்​ஸில் இந்​திய சமூகத்​தினரின் அன்​பான வரவேற்​பால் நெகிழ்ச்சி அடைந்​தேன். இந்​தி​யா​வில் இருந்து ஆயிரக்​கணக்​கான கி.மீ. தொலை​வில் வாழ்ந்​தா​லும் இந்​திய உணர்வு பிர​காச​மாக இருக்​கிறது. கலாச்​சார தொடர்​புக்கு தொலைவு ஒரு தடையல்ல. அர்​ஜென்​டினா உடனான உறவு​கள் மேம்​படுத்​தப்​படும். அதிபர் சேவியர் மிலேய் உடன் விரி​வான பேச்​சுவ​ார்த்தை நடத்த உள்​ளேன்” என்று தெரி​வித்​துள்​ளார்.

    கடந்த 2018-ம் ஆண்​டில் அர்​ஜென்​டி​னா​வில் ஜி20 உச்சி மாநாடு நடை​பெற்​றது. அப்​போது அந்த நாட்டு அதிபர் மிலேயை பிரதமர் நரேந்​திர மோடி முதல்​முறை​யாக சந்​தித்​துப் பேசி​னார். அதன்பிறகு இரு நாடு​கள் இடையி​லான வர்த்தக உறவு வலு​வடைந்து வரு​கிறது.

    தற்​போது 2-வது முறை​யாக அதிபர் சேவியர் மிலேயே பிரதமர் நரேந்​திர மோடி நேற்று சந்​தித்​துப் பேசி​னார். இந்த சந்​திப்​பின்​போது பாது​காப்​பு, விவ​சா​யம், சுரங்​கம், எண்​ணெய், எரி​வா​யு, மரபு​சாரா எரிசக்​தி, வர்த்​தகம், முதலீடு உட்பட பல்​வேறு துறை​களில் இரு நாடு​கள் இடையி​லான உறவை மேம்​படுத்​து​வது குறித்து விரி​வாக ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது. குறிப்​பாக அர்​ஜென்​டி​னா​வில் லித்​தி​யம் சுரங்​கங்​களை அமைப்​பது தொடர்​பாக இரு தலை​வர்​களும் முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்​தினர்.

    சர்​வ​தேச அளவில் சிலி, பொலி​வியா நாடு​களுக்கு அடுத்து அர்​ஜென்​டி​னா​வில் லித்​தி​யம் தனிமம் அதி​க​மாக உள்​ளது. அந்த நாட்​டில் லித்​தி​யம் சுரங்​கங்​களை அமைப்​பது தொடர்​பாக கடந்த பிப்​ர​வரி​யில் இரு நாடு​களிடையே புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இதன்​படி அர்​ஜென்​டினா நாட்​டின் 5 இடங்​களில் மத்​திய அரசின் கேஏபிஐஎல் நிறு​வனம் சார்​பில் சுரங்​கங்​களை அமைக்க திட்​ட​மிடப்​பட்டு உள்​ளது.

    தற்​போது வரை லித்​தி​யம் தேவைக்கு சீனாவையே இந்​தியா நம்​பி​யிருக்​கிறது. அர்​ஜென்​டி​னா​வில் லித்​தி​யம் சுரங்​கங்​களை அமைக்​கும்​போது, இந்​தி​யா​வின் மின்​சார வாகன நிறு​வனங்​களின் தேவையை முழு​மை​யாக பூர்த்தி செய்ய முடி​யும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

    இதுகுறித்து மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறிய​தாவது: இந்​தி​யா​வில் இருந்து பெட்​ரோலிய பொருட்​கள், இருசக்கர வாக​னங்​கள் அர்​ஜென்​டி​னா​வுக்கு அதிக அளவில் ஏற்​றுமதி செய்​யப்​படு​கிறது. அந்த நாட்​டில் இருந்து சோயாபீன் உள்​ளிட்ட வேளாண் பொருட்​கள் அதிக அளவில் இறக்​குமதி செய்​யப்​படு​கிறது. அர்​ஜென்​டி​னா​வின் சோயாபீன் எண்​ணெய் ஏற்​றும​தி​யில் சுமார் 95 சதவீதம் இந்​தி​யா​வுக்கு அனுப்​பப்​படு​கிறது.

    தற்​போது அர்​ஜென்​டி​னா​வில் இருந்து லித்​தி​யத்தை அதிக அளவில் இறக்​குமதி செய்ய முடிவு செய்​யப்​பட்டு உள்​ளது. இதற்​காக அந்த நாட்​டில் இந்​திய அரசு நிறு​வனம் சார்​பில் லித்​தி​யம் சுரங்​கங்​கள் அமைக்​கப்பட உள்​ளன. மேலும் நிலக்​கரி, தாமிரம் உள்ளிட்ட தாதுக்​களை​யும் அதிக அளவில் இறக்​குமதி செய்ய திட்​ட​மிடப்​பட்டு இருக்​கிறது. இவ்​வாறு மத்​திய அரசு வட்​டாரங்​கள்​ தெரிவித்​துள்​ளன.

    400 கி.மீ. கடந்து வந்த இந்தியர்: இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவிஜய் குமார் குப்தா, அர்ஜென்டினாவின் ரோசாரியா நகரில் பணியாற்றி வருகிறார். இது தலைநகர் பியூனஸ் அயர்ஸில் இருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ளது. பிரதமர் மோடியை வரவேற்க 400 கி.மீ. தொலைவை கடந்து விஜய் குமார் குப்தா நேற்று பியூனஸ் அயர்ஸ் நகருக்கு சென்றார். அவர் கூறும்போது, “பிரதமர் மோடியுடன் கைகுலுக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு அது போதும்” என்று தெரிவித்தார்.

    டிரினிடாட் நாட்டில் திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டில் முகாமிட்டிருந்தார். அப்போது அவருக்கு அந்த நாட்டின் மிக உயரிய, ஆர்டர் ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் டிரினிடாட் & டொபாகோ என்ற விருதை அதிபர் கிறிஸ்டின் கார்லா கங்கலூ வழங்கினார். அவரது முன்னோர் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். விழாவில் பிரதமர் மோடி பேசும்போது, “டிரினிடாட் அதிபர் கார்லா கங்கலூவின் முன்னோர் திருவள்ளுவர் பிறந்த மண்ணைச் சேர்ந்தவர்கள். சிறந்த ஆட்சி குறித்த 6 முக்கிய கொள்கைகளை அப்போதே திருவள்ளுவர் எடுத்துரைத்து உள்ளார்” என்று தெரிவித்தார்.

    ‘‘படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு’’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டினார். வீரமிக்க படை, நாட்டுப்பற்றுமிக்க மக்கள், குறையாத செல்வம், நாட்டின் நலன் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் நட்பு, அழிக்க முடியாத காவல் ஆகிய 6 அம்சங்களே அரசுகளில் சிங்கம் போன்றது என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ‘நீங்கள் மருத்துவத்தில் தோல்வியடைந்தீர்கள், மனிதநேயம்’: எப்ஸ்டீனின் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்த மகளிர் மருத்துவ நிபுணர்களை இந்திய வம்சாவளி மருத்துவர் வெடிக்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 9, 2026
    உலகம்

    பரபரப்பான டொராண்டோ மாலுக்கு வெளியே இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் கொல்லப்பட்டார், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைப் பற்றி காவல்துறைக்கு துப்பு இல்லை – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 9, 2026
    உலகம்

    சிங்கப்பூரில் புறாக்களுக்கு உணவளித்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு ரூ.2 லட்சம் அபராதம்; அவள் வேலையில்லாதவள், சமூக சேவை செய்வேன் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 9, 2026
    உலகம்

    டோனி ஹாக்கின் திருமணம் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தீவில் நடந்ததா? ஸ்கேட்போர்டிங் லெஜண்ட் பதிலளிக்கிறார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 8, 2026
    உலகம்

    “இஸ்லாம் இடம்பெயர்வு மீது கட்டமைக்கப்பட்ட மதம்”: NYC மேயர் மம்தானி குடியேற்றத்தைப் பற்றி பேசும் போது நபிகள் நாயகத்தின் ஹிஜ்ரத்தை அழைக்கிறார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 7, 2026
    உலகம்

    எப்ஸ்டீனின் மரணப் படுக்கை: பல மில்லியன் டாலர் செல்வத்தை வாரிசாகப் பெற யார் நின்றார்கள், பாதிக்கப்பட்டவர்கள் பற்றி என்ன? | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நயன்தாரா முதல் ஸ்ரீலீலா வரை: கல்லூரி விழாவில் அசத்திய தென்னிந்திய திவாஸ்
    • ரன்பீர் கபூர் ஏன் தனது மகளுடன் ‘கண்ணாடிச் சுவரை உடைக்க’ விரும்புகிறார், மேலும் அது நவீன பெற்றோரைப் பற்றி என்ன சொல்கிறது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “பாதுகாப்பான உணர்வு என்பது பாதுகாப்பாக இருப்பதற்கு சமம் அல்ல”: ட்ரெவெல்லர் ஆப்கானிஸ்தானில் 13 நாட்கள் கழித்தார் மற்றும் நாட்டின் இதுவரை பார்த்திராத படத்தைக் காட்டுகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சுறாக்கள் ஆட்சி செய்யும் நீருக்கடியில் உள்ள மலையை ஆராயுங்கள் மற்றும் ஒரு மறைக்கப்பட்ட கடல் வாழ்க்கை உயிருடன் வருகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்த கர்நாடக கிராமம் கட்டுமானத்தின் போது புதைக்கப்பட்ட தங்கத்தைக் கண்டுபிடித்தது – ஆனால் அது ஒரு பொக்கிஷம் அல்ல. இதோ ஏன் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.