Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, March 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»“அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ட்ரம்புக்கு நன்றி” – பாகிஸ்தான் பிரதமர் 
    உலகம்

    “அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ட்ரம்புக்கு நன்றி” – பாகிஸ்தான் பிரதமர் 

    adminBy adminMay 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ட்ரம்புக்கு நன்றி” – பாகிஸ்தான் பிரதமர் 
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்தை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகம் நடத்திய மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “பிராந்திய அமைதிக்காக அதிபர் ட்ரம்பின் தலைமைத்துவத்திற்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம். பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக நாங்கள் ஏற்றுக்கொண்ட இந்த முடிவை எளிதாக்கியதற்காக அமெரிக்காவை பாகிஸ்தான் பாராட்டுகிறது.

    தெற்காசியாவில் அமைதிக்காக அவர்களின் மதிப்புமிக்க பங்களிப்புகளுக்கு துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோருக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம். பிராந்தியத்தை பாதித்து, அமைதி, செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கிய அதன் பயணத்தைத் தடுத்த பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இது ஒரு புதிய தொடக்கத்தைக் குறிப்பதாக பாகிஸ்தான் நம்புகிறது” என்று ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

    We thank President Trump for his leadership and proactive role for peace in the region .

    Pakistan appreciates the United States for facilitating this outcome, which we have accepted in the interest of regional peace and stability.

    We also thank Vice President JD Vance and…

    — Shehbaz Sharif (@CMShehbaz) May 10, 2025

    எனினும் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீநகரில் வெடிகுண்டு சத்தம் கேட்பதாக அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    முன்னதாக இந்தியா – பாகிஸ்தான் இடையே அமெரிக்கா நடத்திய சமரச பேச்சுவார்த்தையை அடுத்து, கடந்த 7-ம் தேதி முதல் நடந்து வந்த மோதல் 4 நாட்களில் முடிவுக்கு வந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் இதனை அறிவித்தார். இது தொடர்பாக ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், “அமெரிக்காவின் தலையீட்டால் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தையின் பலனாக இந்தியா – பாகிஸ்தான் மோதலை முழுமையாக, உடனடியாக நிறுத்திக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளன. இரு நாடுகளும் புத்திசாலித்தனமான முடிவை எட்டியதற்கு வாழ்த்துகள். இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியமைக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    கண்ணீர், நிவாரணம் மற்றும் மீண்டும் இணைதல்: மரியாச்சி விளையாடும் டெக்சாஸ் சகோதரர்கள் ICE காவலில் பல வாரங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 10, 2026
    உலகம்

    273 பேரைக் கொன்ற விமானம் 191 இன் கொடிய விபத்தைக் காட்டும் பத்து இரவுகள் குளிர்ச்சியான தரிசனங்களை மனிதன் கண்டான் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 10, 2026
    உலகம்

    ஜோஹ்ரான் மம்தானியின் மாளிகைக்கு வெளியே நடந்த இஸ்லாமிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் IED கள் வீசப்பட்ட பின்னர் 2 பென்சில்வேனியா பதின்ம வயதினரின் வீடுகளை FBI சோதனை செய்தது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 9, 2026
    உலகம்

    ‘அவர் அவர்களை நேசித்தார்’: ஜார்ஜியா ஆசிரியரின் மனைவி, குறும்புத்தனத்தில் டிரக் மூலம் தாக்கப்பட்டார், மாணவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட வேண்டும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 9, 2026
    உலகம்

    ‘H1B விசாக்கள் காரணமாக’: Forsyth கவுண்டியில் உள்ள பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் ஆதிக்கம் செலுத்தும் 35,000 இந்திய-அமெரிக்கர்கள் மீது MAGA கோபமடைந்தது | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 9, 2026
    உலகம்

    LLM கேள்விகளுக்குப் பிறகு தற்கொலை: கேட்டி மில்லர் ‘அன்பானவர்கள் ChatGPT ஐப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்’ என்கிறார், எலோன் மஸ்க் ஒரு வார்த்தை பதிலைச் சேர்த்தார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கோடைக்கால முடி பராமரிப்பு: கோடை வெப்பத்திலிருந்து உங்கள் தலைமுடியைக் காப்பாற்ற 5 சமையலறை ரகசியங்கள்
    • கண்ணீர், நிவாரணம் மற்றும் மீண்டும் இணைதல்: மரியாச்சி விளையாடும் டெக்சாஸ் சகோதரர்கள் ICE காவலில் பல வாரங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சிவம் துபேயின் சொகுசு மும்பை இல்லத்தின் உள்ளே: கிரிக்கெட் வீரரின் ஸ்டைலான இல்லத்தில் ஒரு பார்வை
    • ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சஞ்சனா கணேசனின் மனதைக் கவரும் காதல் கதை: அந்நியர் முதல் வாழ்க்கைத் துணை வரை
    • கத்தார், பஹ்ரைன், குவைத் வான்வெளியை தற்காலிகமாக மூடுவதால் விமானப் போக்குவரத்து தடைபட்டது. துபாய் மற்றும் ரியாத் விமான நிலையங்கள் வரையறுக்கப்பட்ட சேவைகளை இயக்குகின்றன | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.