Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, March 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»அமெரிக்க தாக்குதலில் அணுசக்தி மையங்கள் மோசமாக பாதிப்பு – இழப்பீடு கோரும் ஈரான்!
    உலகம்

    அமெரிக்க தாக்குதலில் அணுசக்தி மையங்கள் மோசமாக பாதிப்பு – இழப்பீடு கோரும் ஈரான்!

    adminBy adminJune 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அமெரிக்க தாக்குதலில் அணுசக்தி மையங்கள் மோசமாக பாதிப்பு – இழப்பீடு கோரும் ஈரான்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தெஹ்ரான்: அண்மையில், அமெரிக்கா நடத்திய தாக்குதலில் தங்கள் நாட்டின் அணுசக்தி மையங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கு உரிய இழப்பீட்டை அமெரிக்கா வழங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் ஐ.நா-வில் புகார் அளிக்கப்படும் என்றும் ஈரான் கூறியுள்ளது.

    கடந்த 21-ம் தேதி அன்று இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க படைகள் தாக்குதலில் இறங்கின. அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலில் ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்களான ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்டவை தாக்கப்பட்டன. இதை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதி செய்திருந்தார்.

    இந்நிலையில், ஈரானின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகி, அமெரிக்க தாக்குதலில் தங்கள் தேசத்தின் முக்கிய அணுசக்தி மையங்கள் மோசமாக சேதமடைந்துள்ளதாக தற்போது தெரிவித்துள்ளார். ‘எங்கள் தேசத்தின் அணுசக்தி மையங்கள் மிக மோசமாக சேதமடைந்துள்ளன’ என அவர் உறுதி செய்தார்.

    “தாக்குதலில் எங்கள் தேசத்தின் அணுசக்தி மையங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் ஐ.நா-வில் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளோம். போர்நிறுத்தம் தொடர்பாக எழுத்துபூர்வமான ஒப்பந்தம் எதுவும் இஸ்ரேல் உடன் மேற்கொள்ளப்படவில்லை. இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தி உள்ளது. அவ்வளவுதான்” என ஈரானின் வெளியுறவு துறையின் துணை அமைச்சர் சயீத் கதிப்சாதே லெபனானை சேர்ந்த ஊடக நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    முன்னதாக, ஈரானின் அணுசக்தி மையங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்ற செய்திகள் வெளியான நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இதனை முழுமையாக மறுத்தார். மேலும், ஈரான் அணுசக்தி மையங்கள் ‘முற்றிலுமாக அழிக்கப்பட்டன’ என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். அமெரிக்க தாக்குதலில் சேதமடைந்த அணுசக்தி மையங்களின் சாட்டிலைட் படங்களை அமெரிக்காவை சேர்ந்த Maxar டெக்னாலஜிஸ் பகிர்ந்துள்ளது. அதில் நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் அணுசக்தி மையங்கள் மிக மோசமாக சேதமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ஜார்ஜியா பள்ளி சண்டை கொடியதாக மாறியது: மற்றொரு மாணவனுடன் சண்டையிட்டு 12 வயது சிறுமி மரணம்; வீடியோவைப் பார்க்கவும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 10, 2026
    உலகம்

    கண்ணீர், நிவாரணம் மற்றும் மீண்டும் இணைதல்: மரியாச்சி விளையாடும் டெக்சாஸ் சகோதரர்கள் ICE காவலில் பல வாரங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 10, 2026
    உலகம்

    273 பேரைக் கொன்ற விமானம் 191 இன் கொடிய விபத்தைக் காட்டும் பத்து இரவுகள் குளிர்ச்சியான தரிசனங்களை மனிதன் கண்டான் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 10, 2026
    உலகம்

    ஜோஹ்ரான் மம்தானியின் மாளிகைக்கு வெளியே நடந்த இஸ்லாமிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் IED கள் வீசப்பட்ட பின்னர் 2 பென்சில்வேனியா பதின்ம வயதினரின் வீடுகளை FBI சோதனை செய்தது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 9, 2026
    உலகம்

    ‘அவர் அவர்களை நேசித்தார்’: ஜார்ஜியா ஆசிரியரின் மனைவி, குறும்புத்தனத்தில் டிரக் மூலம் தாக்கப்பட்டார், மாணவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட வேண்டும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 9, 2026
    உலகம்

    ‘H1B விசாக்கள் காரணமாக’: Forsyth கவுண்டியில் உள்ள பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் ஆதிக்கம் செலுத்தும் 35,000 இந்திய-அமெரிக்கர்கள் மீது MAGA கோபமடைந்தது | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வீட்டு பல்லிகள் வீடுகளுக்குள் எங்கே முட்டையிடுகின்றன: ரகசிய மறைவு இடங்கள் விளக்கப்பட்டுள்ளன | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ரஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் பிரதானம்-மெஹந்தி விழாக்கள் அலங்காரம் மற்றும் பாரம்பரியத்தின் கலைடோஸ்கோப் | புகைப்படங்களைப் பார்க்கவும்
    • கோஹிதூர் மாம்பழம்: பில்லியனர் ஹர்ஷ் கோயங்கா கூட தன்னால் வாங்க முடியாது என்று கூறும் அரிய மற்றும் விலை உயர்ந்த இந்திய பழம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • செவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கான தளங்களை ரோபோக்கள் கண்டுபிடித்தது எப்படி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கெய்ட்லின் டோடுன்ஸ்கி: மிட்செல் சான்ட்னரின் மனைவி கெய்ட்லின் டோடுன்ஸ்கியை சந்திக்கவும்: டி20 உலகக் கோப்பை மனவேதனைக்கு மத்தியில் நியூசிலாந்து கேப்டனின் அமைதியான பலம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.