நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகள் நேற்று முன்தினம் பேருந்தில் சென்றனர். இந்த பேருந்தில் இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸை சேர்ந்த 54 சுற்றுலாப் பயணிகள் இருந்தனர்.
இந்த பேருந்து நயாகரா நீர்வீழ்ச்சி பகுதியிலிருந்து நியூயார்க் நகரத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தது. பஃபலோ நகரிலிருந்து கிழக்கே 40 கி.மீட்டர் தொலைவில் வந்த போது அந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். 49 பேர் லேசான காயங்களுடன் தப்பினர். உயிரிழந்தவர்கள் யார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.