Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, March 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிப்பு – முழு விவரம்!
    உலகம்

    அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிப்பு – முழு விவரம்!

    adminBy adminJune 23, 2025No Comments4 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிப்பு – முழு விவரம்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    டெஹ்ரான்: அமெரிக்க போர் விமானங்​கள், நீர்​மூழ்​கி​ கப்பல்களில் இருந்து சரமாரியாக குண்டுகள், ஏவுகணைகளை வீசி நடத்​தப்பட்ட தாக்குதலில், ஈரானின் 3 அணுசக்தி தளங்​கள் முற்​றி​லு​மாக அழிக்​கப்​பட்​டன.

    ஈரானிடம் 10-க்​கும் மேற்​பட்ட அணுகுண்​டு​கள் தயாரிக்க தேவை​யான யுரேனி​யம் இருப்​ப​தாக கணக்​கிடப்​பட்​டுள்​ளது. ஈரானிடம் உள்ள யுரேனி​யம் தற்​போது 87 சதவீதம் அளவுக்கு செறிவூட்​டப்​பட்டு இருப்​ப​தாக கூறப்​படு​கிறது. யுரேனி​யத்தை சுமார் 90 சதவீதம் அளவுக்கு செறிவூட்​டி​னால் அணுகுண்​டு​களை தயாரிக்க முடி​யும்.

    இதற்​கிடையே, அமெரிக்க அதிப​ராக டொனால்டு ட்ரம்ப் பதவி​யேற்ற பிறகு, ஈரானின் அணுசக்தி திட்​டங்​கள் தொடர்​பாக அந்த நாட்​டுடன் பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்​டது. பேச்​சு​வார்த்தை பல மாதங்​கள் நீடித்​தும், எந்த உடன்​பாடும் எட்​டப்​பட​வில்​லை. இந்த சூழலில், அமெரிக்​கா​வின் நட்பு நாடான இஸ்​ரேல் கடந்த 13-ம் தேதி ஈரானின் அணுசக்தி தளங்​களை குறி​வைத்து திடீர் தாக்​குதல் நடத்​தி​யது. 40-க்​கும் மேற்​பட்ட இஸ்​ரேலிய போர் விமானங்​கள் ஈரானின் நடான்ஸ் நகரில் பூமிக்கு அடி​யில் செயல்​பட்ட அணுசக்தி தளம் மீது சரமாரி​யாக தாக்​குதல் நடத்​தின. ஈரான் தலைநகர் டெஹ்​ரானில் உள்ள அணுசக்தி ஆராய்ச்சி மையம், இஸ்​ப​கான் நகரில் உள்ள அணுசக்தி தொழில்​நுட்ப மையம், அராக் நகரில் உள்ள கனநீர் அணு உலை மையம் ஆகியவை மீதும் சக்​தி​வாய்ந்த குண்​டு​கள் வீசப்​பட்​டன. இஸ்​ரேலின் தாக்​குதலில் ஈரானின் அணுசக்தி விஞ்​ஞானிகள் 14 பேர் உயி​ரிழந்​தனர்.

    இதற்கு பதிலடி​யாக, ஈரானும் இஸ்​ரேல் மீது தாக்​குதல் நடத்​தி​யது. இதை தொடர்ந்​து, இஸ்​ரேல் – ஈரான் இடையே கடும் போர் மூண்​டது. இரு நாடு​களும் கடந்த 10 நாட்​களாக அதிதீ​விர போரில் ஈடு​பட்டு வரு​கின்​றன. ஈரானின் போர்டோ நகரில் மலைக்கு அடி​யில் சுமார் 90 மீட்​டர் ஆழத்​தில் அணுசக்தி தளம் செயல்​பட்டு வந்​தது. இது ஈரானின் அணுசக்தி கோட்டை என்று அழைக்​கப்​பட்​டது. இந்த தளம் மீது சரமாரி​யாக குண்​டு​கள், ஏவு​கணை​களை வீசி இஸ்​ரேல் போர் விமானங்​கள் தாக்​குதல் நடத்​தின. ஆனால், மலைக்கு அடி​யில் அணுசக்தி தளம் இருந்​த​தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்​பட​வில்​லை. ‘பூமியை துளைக்​கும் சக்தி வாய்ந்த அமெரிக்க ராணுவத்​தின் ஜிபி​யு-57 பங்​கர் வெடிகுண்டு மூலம் தாக்​குதல் நடத்​தி​னால் மட்​டுமே போர்டோ அணுசக்தி தளத்தை அழிக்க முடி​யும்’ என்று நிபுணர்​கள் தெரி​வித்​தனர்.

    ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ – இந்த சூழலில், ஈரான் மீது அமெரிக்கா நேற்று நேரடி தாக்​குதலில் ஈடு​பட்​டது. ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ (Operation Midnight Hammer) என்ற பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க விமானப் படை​யின் பி-2 ரகத்தை சேர்ந்த 7 போர் விமானங்​கள் நேற்று அதி​காலை ஈரானின் போர்டோ அணுசக்தி தளத்தை குறி​வைத்து ஜிபி​யு-57 பங்​கர் ரக வெடிகுண்​டு​களை வீசின. ஒவ்​வொரு விமான​மும் தலா 2 குண்​டு​கள் என மொத்​தம் 14 குண்​டு​களை வீசின. இவை 90 மீட்​டர் ஆழத்​துக்கு பூமியை துளைத்து சென்​று, வெடித்து சிதறின. இதில், போர்டோ அணுசக்தி தளம் முற்​றி​லு​மாக சேதமடைந்​தது.

    ஈரானின் நடான்​ஸ், இஸ்​ப​கான் நகரங்​களில் உள்ள அணுசக்தி தளங்​கள் மீதும் பி-2 போர் விமானங்​கள், ஜிபி​யு-57 பங்​கர் வெடிகுண்​டு​களை வீசின. அதே​நேரம், சுமார் 400 மைல் தூரத்தில் கடலுக்கு அடி​யில் முகாமிட்​டிருந்த அமெரிக்க கடற்​படை​யின் நீர்​மூழ்​கி​ கப்பல்களில் இருந்து 30 டோமஹாக் ரக ஏவு​கணை​கள் சீறி பாய்ந்​தன. இந்த ஏவு​கணை​களும் நடான்​ஸ், இஸ்​ப​கான் அணுசக்தி தளங்​களை அடுத்​தடுத்து தாக்​கின. அமெரிக்க போர் வி​மானங்​கள், நீர்​மூழ்​கி​களின்​ தாக்​குதல்​களால்​ ஈரானின்​ 3 அணுசக்​தி தளங்​களும்​ முற்​றி​லு​மாக அழிக்கப்பட்டுள்​ளன.

    பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் ஆலோசனை: இஸ்ரேல் – ஈரான் போர் கடந்த 10 நாட்களாக நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா நேற்று நேரடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன.

    இந்த நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதுதொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசியில் பேசினேன். தற்போதைய சூழல் குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தோம். சமீபகால பதற்றங்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தேன். பதற்றத்தை தணிப்பது, அமைதி பேச்சுவார்த்தை, ராஜதந்திர முயற்சிகள் மூலம் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினேன்.

    ஈரானில் தங்கியிருந்த இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்காக அதிபர் மசூத் பெசெஷ்கியனுக்கு நன்றி தெரிவித்தேன். வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் தொடர்ந்து இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும் என்றும் உறுதி மேற்கொள்ளப்பட்டது.இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    ஈரானில் உள்ள சபஹர் துறைமுகத்தை இந்தியா 10 ஆண்டு குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்த துறைமுகத்தில் இந்திய தரப்பில் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், இஸ்ரேலுடனும் இந்தியாவுக்கு மிக நெருங்கிய உறவு நீடிக்கிறது. பாதுகாப்பு, வர்த்தகம் உட்பட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. இரு நாடுகள் இடையிலான போர் குறித்து இஸ்ரேல்பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோர் பிரதமர் மோடியிடம் ஏற்கெனவே தொலைபேசியில் பேசியுள்ளனர். இந்த சூழலில், போர் தீவிரமடைந்து, ஈரான் மீது அமெரிக்கா நேரடி தாக்குதலில் ஈடுபட்ட நிலையில்,பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ட்ரம்ப் எச்சரிக்கை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று கூறியதாவது: அணு ஆயுதங்களை தயாரிப்பதற்காக ஈரானின் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் அணுசக்தி தளங்களில் யுரேனியம் செறிவூட்டப்பட்டு வந்தது. ஈரான் அணுகுண்டு தயாரித்தால், மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும். எனவே, ஈரானின்3 அணுசக்தி தளங்கள் மீதும் அமெரிக்க ராணுவம் துல்லியதாக்குதல் நடத்தியது. இதில், 3 தளங்களும் அழிக்கப்பட்டுள்ளன. ஈரான் உடனே அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும். இல்லாவிட்டால், அந்த நாட்டின் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படும். ‘அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை அழிப்போம்’ என்று ஈரான் கடந்த 40 ஆண்டுகளாக மிரட்டி வருகிறது. ஈரானின் தாக்குதலால் மத்திய கிழக்கில் ஆயிரக்கணக்கானோரை இழந்துள்ளோம். இனிமேலும் ஈரானின் அத்துமீறல்களை சகித்துக்கொள்ள முடியாது. ஈரான் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க போர் விமானிகளை பாராட்டுகிறேன். உலகின் வேறு எந்த ராணுவத்தாலும் இதுபோன்ற தாக்குதல்களை நடத்த முடியாது. ஈரானின் அணுசக்தி தளங்களை அழித்த இஸ்ரேல் ராணுவத்தையும் பாராட்டுகிறேன். இவ்வாறு ட்ரம்ப் கூறினார். இதுபற்றி ஈரான் அதிபர் பெசெஷ்கியன் கூறும்போது, ‘‘அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். இக்கட்டான நேரத்தில் ஈரான் மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். எந்த சக்தியாலும் நம்மை தடுக்க முடியாது’’ என்றார்.

    அணு கதிர்வீச்சு அபாயம் இல்லை: ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் அணு கதிர்வீச்சு அபாயம் இல்லை என்று சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது. ஈரானின் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் ஆகிய3 இடங்களில் உள்ள அணுசக்தி தளங்களை அமெரிக்கபோர் விமானங்கள் குண்டு வீசி அழித்தன. இதனால் அணு கதிர்வீச்சு ஏற்படும் என்ற அச்சம் எழுந்தது. இதுகுறித்து சர்வதேச அணுசக்தி முகமை வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் தாக்கப்பட்டுள்ளன. எனினும், அணு கதிர்வீச்சு அளவு அதிகரிக்கவில்லை. ஈரானின் நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல, ‘சவுதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளில் அணு கதிர்வீச்சு அபாயம் இல்லை.மக்கள் அச்சப்பட வேண்டாம்’ என்று சவுதி அரேபியாவின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகளில் அணு கதிர்வீச்சு அபாயம் இல்லை என்று கத்தார், குவைத், எகிப்து உள்ளிட்ட நாடுகளின் அணுசக்தி ஆணையங்கள், வளைகுடா கூட்டமைப்பு கவுன்சில் ஆகியவையும் தெரிவித்துள்ளன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    பென்சில்வேனியாவில் ஹெச்-1பி விசா மோசடி, ஹெல்த்கேர் ஊழல் போன்றவற்றில் தண்டனை பெற்ற காஷ் படேலைச் சந்தித்ததைப் பற்றி தற்பெருமை காட்டிய இந்திய வம்சாவளி சகோதரர்கள்; 400 ஆண்டுகள் சிறைத்தண்டனை – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    இங்கிலாந்தின் வெம்ப்லியில் உள்ள இந்திய கடைகள், உணவகங்கள் இலக்கு தாக்குதல்களில் நாசமாக்கப்பட்டன – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    அன்னா லீ வாட்டர்ஸ் யார்? 19 வயதான பிக்கிள்பால் நட்சத்திரம் அடுத்த மாதம் சர்வதேச அறிமுகத்திற்குத் தயாராக உள்ளது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    ‘இந்து விரோதிகளை புண்படுத்த வேண்டாம்’: இந்திய வம்சாவளி பிராண்ட் லட்சுமி சிலையை பேக்கேஜிங்கில் இருந்து அகற்றியது, ஆன்லைனில் பெரும் விமர்சனத்தை எதிர்கொள்கிறது | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    ஜார்ஜியா பள்ளி சண்டை கொடியதாக மாறியது: மற்றொரு மாணவனுடன் சண்டையிட்டு 12 வயது சிறுமி மரணம்; வீடியோவைப் பார்க்கவும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 10, 2026
    உலகம்

    கண்ணீர், நிவாரணம் மற்றும் மீண்டும் இணைதல்: மரியாச்சி விளையாடும் டெக்சாஸ் சகோதரர்கள் ICE காவலில் பல வாரங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சிவப்பு நிற சந்தேரி புடவை, ராயல் பந்த்காலா மற்றும் மும்பை சூரிய அஸ்தமனம்: கிருத்திகா கம்ரா-கௌரவ் கபூரின் நெருக்கமான பாந்த்ரா வீட்டு திருமணத்தின் படங்கள்
    • ‘சீன இளவரசி’ ஜாங் ஜிங்கி சிவப்பு கம்பளத்தின் மீது ‘குப்பைப் பையை’ ஏந்தி இணையத்தை திகைக்க வைத்தபோது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • யாஸ் ராணி: நீருக்கடியில் பம்பல் எப்படி உயிருடன் இருக்கிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பாரிஸ் ஃபேஷன் வீக்: பாரிஸ் பேஷன் வீக்கில் டாம் ஹாலண்டுடனான தனது ரகசிய திருமணத்தைப் பற்றி ஜெண்டயா சுட்டிக்காட்டினாரா? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வரலாற்றில் முதல் தொலைபேசி அழைப்பு: அலெக்சாண்டர் கிரஹாம் பெல்லின் ஒன்பது வார்த்தைகள் தகவல்தொடர்புகளை மாற்றியது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.