Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, April 19
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»‘அன்று அதிகாலை 2.30 மணிக்கு தகவல் கிடைத்தது’ – இந்திய தாக்குதல் பற்றி மனம் திறந்த பாக். பிரதமர்
    உலகம்

    ‘அன்று அதிகாலை 2.30 மணிக்கு தகவல் கிடைத்தது’ – இந்திய தாக்குதல் பற்றி மனம் திறந்த பாக். பிரதமர்

    adminBy adminMay 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘அன்று அதிகாலை 2.30 மணிக்கு தகவல் கிடைத்தது’ – இந்திய தாக்குதல் பற்றி மனம் திறந்த பாக். பிரதமர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    இஸ்லாமாபாத்: ஆபரேஷன் சிந்தூரின்போது தங்கள் நாட்டின் முக்கிய விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது பற்றி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முதன்முறையாக வெளிப்படையாகப் பேசியுள்ளார். கடந்த 10-ம் தேதி அதிகாலை 2.30 மணி அளவில் அந்தத் தகவலை ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர் தன்னிடம் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

    முன்னதாக, நேற்று (வெள்ளிக்கிழமை) இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நிகழ்வில் இதனை அவர் தெரிவித்துள்ளார். “மே.10 அதிகாலை 2.30 மணி அளவில் எனக்கு ஜெனரல் முனீர் போன் செய்தார். அப்போது நமது நாட்டின் முக்கிய விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாக அவர் கூறினார். அது மிகவும் சங்கடம் தந்த தருணம்” என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தெரிகிறது.

    “பாகிஸ்தானும் இந்தியாவும் அமைதியான அண்டை நாடுகளைப் போல காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைத் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். அமைதி நிலவினால் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் நம்மால் ஒத்துழைக்க முடியும்” என ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

    பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயார்: காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து சர்ச்சைக்குரிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரும், துணை பிரதமருமான இஷாக் தர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இந்தியா உறுதி: பாகிஸ்தானுடனான எந்தவொரு பேச்சுவார்தையும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்ததாக மட்டுமே இருக்கும். ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகளின் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது. அவர்கள் பயங்கரவாதிகளின் கட்டமைப்பை மூட வேண்டும். இந்தியா பாகிஸ்தான் பிரச்சினையில் மூன்றம் தரப்பு மத்தியஸ்தம் செய்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஏற்கெனவே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    மார்க் கார்னி குருத்வாரா சாஹிப் ஒட்டாவாவைப் பார்வையிடுகிறார்: பார்க்க: கனடா பிரதமர் மார்க் கார்னி சீக்கிய பாரம்பரிய மாதத்தைக் கொண்டாடுகிறார், ஒட்டாவா குருத்வாராவில் சமூக சேவையில் சேர்ந்தார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 19, 2026
    உலகம்

    80 வயதான சீக்கியர், ஃபவுஜா சிங்கால் ஈர்க்கப்பட்டு, முதல் முறையாக லண்டன் மராத்தான் ஓடினார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 18, 2026
    உலகம்

    சுனிதா வில்லியம்ஸ் 130 வது பாஸ்டன் மராத்தான் ஓடுகிறார், வெறுங்காலுடன் டீன் ரன் மற்றும் வரலாற்று விண்வெளி மராத்தான் பிறகு திரும்பினார் | சர்வதேச விளையாட்டு செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 17, 2026
    உலகம்

    பாஸ்டன் மராத்தான் 2026: சமீபத்திய எதிர்பார்க்கப்படும் பந்தய நிலைமைகள், தேதி, பாதை மற்றும் வானிலை முன்னறிவிப்பைச் சரிபார்க்கவும் | சர்வதேச விளையாட்டு செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 17, 2026
    உலகம்

    EB-5 இல் முதலீடு செய்வதன் மூலம் இந்தியர்கள் ஒரு உதவி செய்கிறார்கள்: தொழில்நுட்ப தொழில்முனைவோர் ‘இனவெறி குப்பைகளை’ நிறுத்த அழைப்பு – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 17, 2026
    உலகம்

    வைரல் வீடியோவில் பார்க்கிங் ஸ்பாட் சண்டையின் போது அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி மருத்துவர் கரும்பு குச்சியைப் பயன்படுத்துவதைக் கண்டார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உங்கள் திருமணத்தை அழிக்கும் 10 நுட்பமான பழக்கங்கள்
    • அனில் கும்ப்ளேவின் கோடிக்கணக்கான மதிப்புள்ள பெங்களூர் வில்லாவின் உள்ளே: பசுமையான தோட்டங்கள், சூரிய ஒளியின் உட்புறம் மற்றும் குடும்ப வாழ்க்கையுடன் சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்ட உறைவிடம்
    • ஆளுமை சோதனை: ஒரு மரத்தைத் தேர்ந்தெடுத்து, அது உங்களின் மிகப்பெரிய திறமையைப் பற்றி என்ன சொல்கிறது என்பதைப் பார்க்கவும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஒரு பெரிய காண்டாமிருகம் தெருவில் சிறுநீர் கழித்தது மற்றும் ஒரு பெண் செய்தது இணையம் மறக்க முடியாத ஒன்று… – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சர் எட்மண்ட் ஹிலாரியின் அன்றைய பயண மேற்கோள்: “இது நாம் வெல்லும் மலையல்ல, நம்மை நாமே” – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • April 2026
    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.