கடலூர்: ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்கர்ய சபா சார்பில் கடலூரில் 27-வது வைணவ மாநாடு நடைபெற்றது.
ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்கர்ய சபா சார்பில் 27-வது வைஷ்ணவ மாநாடு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டை முன்னிட்டு கருட கொடியை கோ.லட்சுமண ராமானுஜ சுவாமி ஏற்றி வைத்தார். அரவிந்தன் சுவாமி திருமால் வணக்கம் பாடினார். சபா தலைவர் சே.ஸ்ரீதர் ராமானுஜ தாசன் வரவேற்றார். பொருளாளர் பி.எஸ். வெங்கடேசன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
ஆன்மிக சொற்பொழிவு: திருக்கோவிலூர் ஸ்ரீமத் ஜீயர் சுவாமிகள் தலைமை வகித்து, மங்களா சாசனம் வழங்கினார். ‘ஆகமத்தில் ஆனந்தன்’ என்ற தலைப்பில் திருச்சி ஸ்ரீரங்கம் ராமன் பட்டாச்சாரியார் ஸ்வாமி, ‘திருநாம வைபவம்’ என்ற தலைப்பில் திருவல்லிக்கேணி ஸ்ரீநிவாஸாச்சாரியார் ஸ்வாமி, ‘கள்ளனும் குள்ளனும்’ என்ற தலைப்பில் தூத்துக்குடி சடஜித் சுவாமி, ‘ வைஷ்ணவ லக் ஷணம்’ என்ற தலைப்பில் திருச்சி ஸ்ரீரங்கம்
உ.வே.ஸாரதி தோத்தாரி ஸ்வாமி, ‘கொண்டாட்டம்’ என்ற தலைப்பில் ஸ்ரீரங்கம் உ.வே.வகுளாபரணன் ஸ்வாமி ஆகியோர் சொற்பொழிவு நிகழ்த்தினர்.
சபா செயலாளர் இரா. இளங்கோவன் நன்றி கூறினார். நிகழ்வை வளவதுரையன் ஒருங்கிணைத்து வழங்கினார். இதில் ஏராளமான வைஷ்ணவ பக்தர்கள் கலந்து கொண்டனர்.