
நாகப்பட்டினம்: ஆண்டுதோறும் நவ. 2-ம் தேதியை கல்லறை திருநாளாக கிறிஸ்தவர்கள் அனுசரிப்பது வழக்கம். இதையொட்டி, நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில், இறந்த குருக்கள், உறவினர்களின் ஆன்மாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நேற்று கல்லறை திருநாளாக அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள், வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றி அடக்கம் செய்யப்பட்ட பாதிரியார்கள் மற்றும் தங்களது உறவினர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரித்து, உணவுப் பண்டங்களை வைத்து படையலிட்டு, மெழுகுவத்தி ஏற்றி, சிறப்பு வழிபாடு நடத்தினர்.

