திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்.வி. அன்னதானம், எஸ்.வி. பிராணதானம், ஸ்ரீ எஸ்.வி. வித்யாதானம் ஆகிய அறக்கட்டளைகளுக்கு ரூ.1.23 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் பெல்லாரியில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசா கன்ஸ்டிரக்ஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இதற்காக வரைவோலைகளை திருமலையில் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி சி.எச்.வெங்கையா சவுத்ரியிடம் வழங்கினர்.
இதில் எஸ்.வி. அன்னபிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடியே 1 லட்சத்து 11,111, எஸ்.வி. பிராணதானம் அறக்கட்டளைக்கு ரூ.11 லட்சத்து 11,111, எஸ்.வி வித்யாதானம் அறக்கட்டளைக்கு ரூ.11 லட்சத்து 11,111 என நன்கொடை வழங்கப்பட்டது.
இதேபோல் திருப்பதியை சேர்ந்த கே.எஸ்.பி.டாக்கீஸ் நிறுவன தலைவர் கேதன் சிவபிரீதம் ஸ்ரீ வெங்கடேஸ்வர நித்ய அன்னப்பிரசாத அறக்கட்டளைக்கு ரூ. 10 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார். அறங்காவலர் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி, சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.