Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, June 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»ஜூலை 18 முதல் ஆக.15 வரை ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா – முன்பதிவு தொடக்கம்
    ஆன்மீகம்

    ஜூலை 18 முதல் ஆக.15 வரை ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா – முன்பதிவு தொடக்கம்

    adminBy adminJune 28, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஜூலை 18 முதல் ஆக.15 வரை ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா – முன்பதிவு தொடக்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம், ஆடி மாதத்தில் ஒருநாள் அம்மன் கோயில்கள் சுற்றுலா ஜூலை 18 முதல் ஆக.15 வரை ஒரு மாத காலத்துக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்படவுள்ளது, என்று தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், ஆன்மிக சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா ஜூலை 18 முதல் ஆக. 15 வரை ஒரு மாதம் காலத்துக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்படுகிறது.

    ஆடி அம்மன் சுற்றுலா சென்னை-1: (ஒரே நாளில் 8 அம்மன் கோயில்கள்): சென்னை திருவல்லிகேணி சுற்றுலா வளாகத்திலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு காளிகாம்பாள் கோயில், பாரிமுனை – அங்காள பரமேஸ்வரி கோயில், ராயபுரம் – வடிவுடையம்மன் கோயில், திருவொற்றியூர் – பவானி அம்மன் கோயில், பெரியபாளையம் – அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், புட்லூர் – திருவுடையம்மன் கோயில், திருமுல்லைவாயில் – பச்சையம்மன் கோயில், திருமுல்லைவாயில் – பாலியம்மன் கோயில், வில்லிவாக்கம் ஆகிய கோயில்களை கண்டு தரிசனம் செய்து வரும் வகையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இச்சுற்றலாவில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும். இச்சுற்றுலாவுக்கான கட்டணம் ரூ.1000.

    ஆடி அம்மன் சுற்றுலா சென்னை-2: (ஒரே நாளில் 10 அம்மன் கோயில்கள்): சென்னை திருவல்லிகேணி சுற்றுலா வளாகத்திலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு கற்பகாம்பாள் கோயில், மைலாப்பூர் – முண்டகண்ணி அம்மன் கோயில், மைலாப்பூர் – கோலவிழியம்மன் கோயில், மைலாப்பூர் – ஆலயம்மன் கோயில், தேனாம்பேட்டை – முப்பாத்தம்மன் கோயில், தி.நகர் – பிடாரி இளங்காளி அம்மன் கோயில், சைதாப்பேட்டை- அஷ்டலெஷ்மி கோயில், பெசண்ட் நகர் – காமாட்சி அம்மன் கோயில், மாங்காடு- தேவி கருமாரியம்மன் கோயில், திருவேற்காடு- பாதாள பொன்னியம்மன் கோயில், கீழ்பாக்கம் ஆகிய கோயில்களை கண்டு தரிசனம் செய்து வரும்வகையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இச்சுற்றுலாவில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும். இச்சுற்றுலாவுக்கான கட்டணம் ரூ.800.

    ஆடி அம்மன் சுற்றுலா – மதுரை: மதுரை, ஓட்டல் தமிழ்நாடு, அழகர் கோயில் சாலையிலிருந்து மீனாட்சி அம்மன் கோயில், மதுரை – மாரியம்மன் கோயில், வண்டியூர்- காளியம்மன் கோயில், மடப்புரம் – வெட்டுடையார் காளியம்மன் கோயில், விட்டனேரி – முத்து மாரியம்மன் கோயில், தாயமங்கலம் – ராக்காயி அம்மன் கோயில், அழகர் கோயில், ஆகிய கோயில்களை கண்டு தரிசனம் செய்து வரும் வகையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இச்சுற்றுலாவில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு, அனைத்து கோயில்களிலும் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவுக்கான கட்டணம் ரூ.1400.

    ஆடி அம்மன் சுற்றுலா – திருச்சி: திருச்சியில் வெக்காளியம்மன் கோயில், உறையூர் – கமலவல்லி நாச்சியார் கோயில், உறையூர் – அகிலாண்டேஸ்வரி கோயில், திருவானைக்காவல் – மாரியம்மன் கோயில், சமயபுரம் – உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோயில், சமயபுரம் – மதுர காளியம்மன் கோயில், சிறுவாச்சூர் – பொன்னேஸ்வரி அம்மன் கோயில், பொன்மலை – உக்கிர காளியம்மன் கோயில், திருச்சி ஆகிய கோயில்களை கண்டு தரிசனம் செய்து வரும் வகையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இச்சுற்றுலாவில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும். இச்சுற்றுலாவுக்கான கட்டணம் ரூ.1100.

    ஆடி அம்மன் சுற்றுலா – தஞ்சாவூர்: வராகி அம்மன் (பெரிய கோயில்) கோயில், தஞ்சாவூர் – பங்காரு காமாட்சி அம்மன் கோயில், தஞ்சாவூர் – மகா மாரியம்மன் கோயில், புன்னைநல்லூர் – கற்பரட்சாம்பிகை கோயில், திருக்கருகாவூர் – துர்கை அம்மன் கோயில், பட்டீஸ்வரம் – பாடைகட்டி மகா மாரியம்மன் கோயில், வலங்கைமான் – நாகநாதசுவாமி கிரிகுஜாம்பிகை கோயில், திருநாகேஸ்வரம் – காசி விஸ்வநாதர் விசாலாட்சி கோயில், மகாமக குளம், கும்பகோணம் – ஐராவதேசுவரர் (பெரியநாயகி அம்மன்) கோயில், தாராசுரம் ஆகிய கோயில்களை கண்டு தரிசனம் செய்து வரும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், இச்சுற்றுலாவில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும். இச்சுற்றுலாவுக்கான கட்டணம் ரூ.1400 .

    இச்சுற்றுலாக்களில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு, அனைத்து கோயில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசனம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே சுற்றுலாப் பயணிகள், ஆன்மிக அன்பர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மேலும், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள அம்மன் கோயில்களை ஆன்மிக சுற்றுலாப் பயணிகள் தரிசிக்கும் பொருட்டு, 5 நாட்கள் 108 அம்மன் கோயில்கள் சுற்றுலாவுக்கும், ஆடி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு 3 நாட்கள் ராமேஸ்வரம் (ஆடி அமாவாசை) சுற்றுலாவுக்கும் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இந்த சுற்றுலாக்களுக்கு என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 180042531111, 044-25333333, 044-25333444 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    அருப்புக்கோட்டை கோயிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா!

    June 27, 2025
    ஆன்மீகம்

    தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி தொடக்கம்

    June 26, 2025
    ஆன்மீகம்

    ராமேசுவரம் கோயிலில் ரூ.1.16 கோடி உண்டியல் காணிக்கை வருவாய்

    June 25, 2025
    ஆன்மீகம்

    திருமலையில் ஜூலை மாத விசேஷங்கள்

    June 25, 2025
    ஆன்மீகம்

    அம்மன் கோயில்களுக்கான ஆடி மாத இலவச ஆன்மிக பயணம்: 5 கட்டங்களாக அழைத்து செல்ல ஏற்பாடு

    June 24, 2025
    ஆன்மீகம்

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன தரிசன கொடியேற்றம்: ஜூலை 1-ம் தேதி தேர்த்திருவிழா

    June 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் இடஒதுக்கீடு – மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு
    • பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல் – 16 ராணுவ வீரர்கள் பலி
    • புதுவை மாநில பாஜக தலைவர் பதவிக்கு நாளை வேட்புமனு தாக்கல்
    • அதிக நம்பிக்கையான மக்களின் 5 பழக்கம்
    • பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘தர்ம சக்ரவர்த்தி’ பட்டம் வழங்கல்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.