Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»ஜகத்​குரு ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகளின் பவள​விழா
    ஆன்மீகம்

    ஜகத்​குரு ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகளின் பவள​விழா

    adminBy adminApril 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஜகத்​குரு ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகளின் பவள​விழா
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சிருங்​கேரி ஸ்ரீ சாரதா பீடத்​தின் 36-வது பீடா​திபதி ஜகத்​குரு ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகளின் 75-வது அவதா​ரத் திரு​நாள் வைபவம், சிருங்​கேரி உள்​ளிட்ட பல இடங்​களில் கொண்​டாடப்​பட்டு வரு​கிறது.

    ஸ்ரீ ஆதிசங்​கர​ரால் ஸ்தாபிக்​கப்​பட்ட சிருங்​கேரி ஸ்ரீ சாரதா பீடத்​தின் (சிருங்​கேரி மடம்) 35-வது பீடா​திப​தி​யான ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகள் தமது சீட​ராக சீதா​ராம ஆஞ்​சநேயலு என்​கிற பிரம்​மச்​சா​ரியை ஏற்​றுக் கொண்​டார். சிறு வயதிலேயே வேதம், சாஸ்​திரம் முதலிய​வற்​றில் நன்குகற்​றுத் தேர்ந்து ஒழுக்க சீல​ராக விளங்​கிய சீடருக்கு 1974-ம் ஆண்டு நவ. 11-ம் தேதி சந்​நி​யாசிரமத்தை முறைப்​படி வழங்கி ‘ஸ்ரீ பாரதி தீர்த்​தர்’ என்​கிற யோகப் பட்​டத்தை வழங்​கி​னார்.

    ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள் ஆந்​திர மாநிலம் குண்​டூர் மாவட்​டத்​தில் உள்ள அலகுமல்​லிபடு என்னும் கிராமத்​தில் வாழ்ந்த வெங்​கடேஸ்வர அவதானி – அனந்​தலட்​சுமி தம்​ப​திக்கு நல்​மக​னாக 1951-ம் ஆண்டு ஏப். 11-ம் தேதி சிவபெரு​மானின் திரு​வருளால் அவதரித்​தார். சிறு​வய​திலேயே துறவறம் பெற்ற இவர் தமது குரு​நாதர் மூலம் வேத சாஸ்​திரங்​களில் மேற்​படிப்​பை​யும், மடத்​தின் மரபு​களை​யும், நிர்​வாக நுணுக்​கங்​களை​யும் திறம்பட கற்​றறிந்​தார்.

    1989-ம் ஆண்டு குரு​நாதர் சித்​தி​யடைந்த பின்​னர் மடத்​தின் மரபுப்​படி 36-வது பீடா​திப​தி​யாக அதே ஆண்டு பொறுப்​பேற்​றார். சிறந்த தவயோகி​யான இவர் தொலைநோக்கு சிந்​தனை​யுடன் மடத்​தின் வளர்ச்​சி​யில் இன்​றள​வும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். நாட்​டின் பல இடங்​களில் மடத்​தின் கிளை​களை​யும், கோயில், தியானமண்​டபம், வேதபாட​சாலை, கோசாலை, மருத்​து​வ​மனை போன்​றவற்​றை​யும் ஏற்​படுத்​தி​னார்.

    சிருங்​கேரி மடத்​தின் வளாகத்தை சீர்​படுத்தி புதி​ய​தாக ‘குருநிவாஸ்’ என்​கிற பெரிய மண்​டபம், பக்​தர்​கள் வசதி​யாக தங்​கு​வதற்கு விடு​தி​கள், தின​மும் இரு​வேளை இலவச​மாக உணவு அருந்த பெரிய அளவி​லான அன்​ன​சாலை, ஸ்ரீ ஆதி சங்​கரருக்கு புதிய பொலிவுடன் தனி​யாக கோயில்ஸ்ரீ சாரதாம்​பாள் கோயில் கோபுரத்​துக்கு தங்க கவசம், தங்​கத் தேர், தங்க வாயில், மடத்​தின் முன்​புறம் பெரியள​வில் ராஜ கோபுரம், ஸ்ரீ ஆதிசங்​கரருக்கு சிருங்​கேரி அருகே சிறிய குன்​றில் மிகப் பெரிய சிலை என்று பல திருப்​பணி​களை உலகம் போற்​றும் வகை​யில் செய்​துள்​ளார்.

    மேலும் ஏழை எளியோ​ருக்கு உதவும் வண்​ணம் மடத்​தின் சார்​பில் சமூக, சமு​தாய நற்​பணி​களை முனைப்​புடன் செய்து வரு​கிறார். பன்​மொழி வித்​தக​ரான இவர், தன்னை நாடி வரும் பக்​தர்​களின் மனக்​குறை​களை தீர்த்​து, அவர்​களுக்கு நல்​வழியை காட்​டு​வ​தில் கருணைக் கடல் என்றே சொல்​லலாம். இவரது 75-வது அவதா​ரத் திரு​நாளை (வர்​தந்​தி) முன்​னிட்டு சிருங்​கேரி, கடந்த மாதம் 30-ம் தேதி முதல் விழாக்​கோலம் பூண்​டுள்​ளது.

    சிறப்பு உபன்யாசம்: இந்த வைபவத்தை முன்​னிட்டு ஏப். 3-ம் தேதி மாலை 6 மணி அளவில் சென்னை தேனாம்​பேட்டை எல்​டாம்ஸ் சாலை​யில் உள்ள தத்​வலோகா அரங்​கில், ‘குரு வடி​வாக திகழும் தட்​சிணா​மூர்த்​தி’ என்ற தலைப்​பில் பிரம்மஸ்ரீ முனை​வர் மணி திரா​விட் சாஸ்​திரி​கள் உபன்​யாசம் நிகழ்த்த உள்​ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா தொடக்கம்

    July 4, 2025
    ஆன்மீகம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி செப்புத் தேரோட்டம் கோலாகலம்

    July 4, 2025
    ஆன்மீகம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் 28 ஆண்டுகளுக்கு பின் நடந்த கும்பாபிஷேகம்

    July 3, 2025
    ஆன்மீகம்

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா கோலாகலம்: ‘சிவ சிவ’ முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

    July 3, 2025
    ஆன்மீகம்

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் யானைக்கு மணிமண்டபம்!

    July 2, 2025
    ஆன்மீகம்

    ஆனித் திருமஞ்சனம்: சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் கோலாகலம்

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மூத்த தமிழறிஞர் வா.மு.சேதுராமன் மறைவு: முதல்வர், அரசியல் தலைவர்கள் அஞ்சலி
    • “புத்த மதம், திபெத் மக்களுக்கு சேவையாற்ற 130 வயது வரை வாழ விரும்புகிறேன்” – தலாய் லாமா
    • ஷுப்மன் கில் 162 பந்துகளில் 161 ரன்கள் விளாசல்: இங்கிலாந்து அணிக்கு 536 ரன்கள் இலக்கு
    • அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: லித்தியம் சுரங்கங்கள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை
    • ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை சிதம்பரத்தில் முதல்வர் ஜூலை 15-ல் தொடங்கி வைக்கிறார்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.