டேராடூன்: உத்தராகண்ட்டில் சார் தாம் யாத்திரை சீராகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை மாநில அரசு உறுதி செய்துள்ளது என்று அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘உத்தராகண்டில் சார் தாம் யாத்திரை சீராகவும் பாதுகாப்பாகவும் நடைபெற்று வருகிறது. ஹெலிகாப்டர் சேவைகளும் செயல்பாட்டில் உள்ளன. சார் தாம் யாத்திரை சீராகவும் பாதுகாப்பாகவும் செயல்படுவதை மாநில அரசு உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக தெரிவித்துள்ள முதல்வர் புஷ்கர் சிங் தாமி, “சார் தாம் யாத்திரை சீராகவும், பாதுகாப்பாகவும், நன்கு ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் செயல்படுவதை உறுதி செய்வதற்கு மாநில அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பே அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாகும்” என தெரிவித்துள்ளார்.
சார் தாம் யாத்திரை மாநிலம் முழுவதும் பாதுகாப்பாக நடத்தப்படுகிறது. பயண வழித்தடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர் சேவைகளும் சீராக இயங்குகின்றன. உண்மையான நிலைமையை மதிப்பிடவும், தேவையான மேம்பாடுகளை உறுதி செய்யவும், சார் தாம் பயண வழித்தடங்களை அவ்வப்போது ஆய்வு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து செயலாளர்களுக்கும் முதல்வர் உத்தரவிடப்பட்டுள்ளார். இது தொடர்பாக பொருத்தமான வழிமுறைகளை வெளியிட தலைமைச் செயலாளருக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
எந்தவொரு அவசரகால சூழ்நிலையையும் உடனடியாக நிவர்த்தி செய்ய யாத்திரையின் நிகழ்நேர கண்காணிப்பு அமைப்பு இன்னும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதை முதல்வர் வலியுறுத்தியுள்ளார். மேலும், வரவிருக்கும் மழைக்காலத்துக்கு முன்னர் அனைத்து ஏற்பாடுகளையும் முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
கூடுதலாக, மாநிலத்தில் நடைபெறும் பிற மத யாத்திரைகளுக்கான பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகளை வலுப்படுத்த வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார். சார் தாம் யாத்திரையை பக்தர்களுக்கு மறக்கமுடியாத, பாதுகாப்பான மற்றும் வசதியான அனுபவமாக மாற்ற மாநில அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.