ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே நெல்லி செட்டி தெருவில் உள்ள கெங்கையம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாத திருவிழாவில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பல்வேறு அலங்காரத்தில் அம்மன் காட்சி தருவது வழக்கம்.
முதல் வெள்ளிக்கிழமை பூக்களாலும், 2-ம் வெள்ளிக்கிழமை காய்கறிகளாலும், 3-ம் வெள்ளிக்கிழமை பழங்களாலும், 4-ம் வெள்ளிக்கிழமை வெற்றிலைகளாலும், 5-ம் வெள்ளி ரூபாய் நோட்டுகளாலும் ஆண்டுதோறும் அலங்கரித்து விழா கொண்டாடுவது வழக்கம்.
அதன்படி, நேற்று 5-ம் வெள்ளிக்கிழமையையொட்டி 5 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அம்மன் கோயில் கருவறை அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.