Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»காரைக்கால் அம்மையார் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
    ஆன்மீகம்

    காரைக்கால் அம்மையார் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

    adminBy adminMay 5, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    காரைக்கால் அம்மையார் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    காரைக்​கால்: காரைக்கால் அம்மையார், சோமநாதர், அய்யனார் கோயில்களின் கும்பாபிஷேகம் நேற்று சிறப்பான வகையில் நடைபெற்றது. காரைக்கால் கைலாசநாதர்- நித்ய கல்யாண பெருமாள் வகையறா தேவஸ்தானத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற காரைக்கால் அம்மையார் கோயில், சோமநாயகி சமேத சோமநாத சுவாமி கோயில், பூர்ண புஷ்கலா அய்யனார் கோயில் ஆகிய கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, 17 ஆண்டுகளை கடந்த நிலையில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, ரூ.90 லட்சம் மதிப்பில் கடந்த ஓராண்டாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்தன.

    இதையடுத்து, கும்பாபிஷேகத்துக்கான பூர்வாங்க பூஜைகள் ஏப்.30-ம் தேதி காலை தொடங்கின. மே 1-ம் தேதி மாலை முதல் கால யாக பூஜைகள் தொடங்கப்பட்டு, நேற்று காலையுடன் 6 கால யாக பூஜைகள் நிறைவு பெற்று, மங்கல வாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோயிலை வலம் வந்து காலை 6.30 மணியளவில் பூர்ண புஷ்கலா சமேத அய்யனார் கோயில் விமானம், அம்மையார் திருக்குளத்து நந்தி விமானத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    விழா​வில் பங்​கேற்ற பக்​தர்​களில் ஒரு பகுதியினர்.

    தொடர்ந்து 8 மணியளவில் சோமநாத சுவாமி, அம்மையார் கோயில்களின் ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு சிவாச்சாரியார்களால் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சுவாமிகளுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

    விழாவில், புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், குடிமைப் பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன், எம்எல்ஏக்கள் ஏ.எம்.எச்.நாஜிம், பி.ஆர்.சிவா, எம்.நாகதியாகராஜன், மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சவுஜன்யா, கோயில் நிர்வாக அதிகாரி ஆர்.காளிதாசன், நிர்வாக அதிகாரி(கோயில்கள்) கு.அருணகிரிநாதன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டு தரிசனம் செய்தனர். 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்: விழாக்கோலம் பூண்டது திருச்செந்தூர்

    July 6, 2025
    ஆன்மீகம்

    திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா தொடக்கம்

    July 4, 2025
    ஆன்மீகம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி செப்புத் தேரோட்டம் கோலாகலம்

    July 4, 2025
    ஆன்மீகம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் 28 ஆண்டுகளுக்கு பின் நடந்த கும்பாபிஷேகம்

    July 3, 2025
    ஆன்மீகம்

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா கோலாகலம்: ‘சிவ சிவ’ முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

    July 3, 2025
    ஆன்மீகம்

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் யானைக்கு மணிமண்டபம்!

    July 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அத்துமீறி செயல்படும் காவல் துறை: ஓபிஎஸ் குற்றச்சாட்டு
    • ஆக்சியம் -4: பெங்களூரு ‘நீர் கரடிகள்’ விண்வெளியில் அவற்றின் நோக்கத்தை வழங்குகின்றன | இந்தியா செய்தி – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வழக்கறிஞரிடம் ரூ.96 லட்சம் மோசடி: அதிமுக ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் கைது
    • ஆப்டிகல் மாயை: “வெவ்வேறு” டைனோசரை 10 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா? – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அமர்நாத் யாத்திரையில் பேருந்துகள் மோதல்: 36 பக்தர்கள் காயம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.