காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயிலில் ஆடிப்பூரம் விழா இன்று நடைபெற்றது.
ஆடிப்பூரம் என்பது ஆண்டாள் அவதரித்த திருநாளாகும். இந்த நாளில் பெருமாள் கோயில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதன்படி காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் சிறப்பு திருமஞ்சனமும் நடைபெற்றது.
இந்த விழாவையொட்டி நூற்றுக்கணக்கான பெண்கள் கோயிலுக்கு வந்து ஆண்டாளுக்கு வளையல் அணிவித்து வழிபாடு செய்தனர். விழாவின் ஒரு பகுதியாக ஆண்டாள் உற்சவர் நடைபெற்றது, இதில் ஆண்டாள் யதோக்தகாரி பெருமாளுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.