கடலூர்: ஆடி பெருக்கை முன்னிட்டு கடலூர் மாவட்ட நீர் நிலைகளில் புதுமண தம்பதிகள், பொதுமக்கள் குவிந்து படையல் செய்தனர்.
தமிழகத்தில் ஆடி மாதம் முழுவதும் கோவில்களில் விழாக்கள் நடைபெற்றும். மாதம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு இருக்கும். இந்த நிலையில் ஆடி மாதம் 18ம் தேதி அன்று ஆடி பெருக்கை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். புதுமண தம்பதிகள் வழிப்பாடு் செய்வர்.
அதன்படி ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று (ஆக.3) கடலூர் பகுதியை சேர்ந்த புதுமண தம்பதிகள், பொது மக்கள் ஏராளமானோர் கடலூர் சில்வர் கடற்கரையில் கூடினர். வாழை இலையில் அரிசி, வெல்லம், பொறி, பழங்களை வைத்து இயற்கையை வழிபட்டனர். பின்னர் சுமங்கலி பெண்கள் புதிதாக தாலி கயிறுகளை மாற்றினர். புதுமண தம்பதிகள் இயற்கையை வழிபட்டு தங்கள் திருமண மாலைகளை நீரில் விட்டனர்.
இதே போல் தென்பெண்ணை ஆறு உள்ளிட்ட பல்வேறு ஆற்றில் புதுமணத் தம்பதியினர் வந்து, படையிலிட்டும் வழிபாட்டில் ஈடுபட்டு திருமண மாலையை ஆற்றில் விட்டனர். இது போல சிதம்பரம் அருகே வல்லம் படுகை கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் புதுமண தம்பதியினர் பொதுமக்கள் குவிந்தனர்.
பின்னர் கொள்ளிடம் ஆற்றில் புதுமண தம்பதியினர் படையல் செய்து தங்களது திருமண மாலைகளை ஆற்றில் விட்டனர். பொதுமக்கள் குடும்பத்துடன் வாழை இலை போட்டு மஞ்சளில் பிள்ளையார் செய்து வாழைப்பழம் , பொறி, வெள்ளம் கலந்த அரிசி, பழங்கள் ஆகியவை வைத்து படையல் செய்தனர். தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் யாரும் தண்ணீரில் இறங்கக்கூடாது என்று அண்ணாமலை நகர் காவல்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.
போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக சிதம்பரம் நடராஜர் கோயில் நடராஜரின் அம்சமான சத்திர சேகர சாமிகளுக்கு கொள்ளிடம் ஆற்றல் தீர்த்தவாரி நடைபெற்றது. பல்வேறு இடங்களில் அன்னதானம் செய்யப்பட்டது.
கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் சிதம்பரம் மற்றும் அதனை சுற்று உள்ள பகுதியில் உள்ள பொதுமக்கள் குவிந்து படையிலிட்டு வழிப்பட்டனர். இதுபோல கொள்ளிட ஆற்றின் கரையோர கிராமமக்கள் அந்தந்த பகுதியில் பொதுமக்கள் படையிலிட்டு வழிப்பட்டனர். இதுபோல வீராணம் ஏரியில் பொதுமக்கள் குவிந்து படையிலிட்டு வழிப்பட்டனர்.