சண்டிகர்: ஆபரேஷன் சிந்தூரை கேலி செய்யும் விதமாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசிய கருத்தானது பெரும் அரசியல் சர்ச்சையை தூண்டியுள்ளது. அவர் இந்திய ராணுவத்தை விமர்சித்ததாக பாஜக தெரிவித்துள்ளது. லூதியானாவில் இடைத்தேர்தலுக்கு முன்னதாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாஜக வாக்கு சேகரிப்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், “ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாஜக வாக்குகளை கோருகிறது. அவர்கள் ‘சிந்தூர்’ என்பதை நகைச்சுவையாக மாற்றியுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சிந்தூர் (குங்குமம்) அனுப்புகிறார்கள். இப்போது பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் ‘சிந்தூர்’ பயன்படுத்துவீர்களா? இது ‘ஒரே நாடு, ஒரே கணவர்’ திட்டமா?” என்று கேள்வியெழுப்பினார் அவர் பயன்படுத்திய “ஒரே நாடு, ஒரே கணவர்” என்ற சொற்றொடர் உடனடியாக அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை உருவாக்கியது. இது குறித்து பேசிய பஞ்சாப் பாஜக செய்தித் தொடர்பாளர் பிரித்பால் சிங் பலியாவால், “பகவந்த் மான் அனைத்து வரம்புகளையும் மீறுகிறார்.…
Author: admin
மதுரை: ராமேஸ்வரம் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழா அடுத்தாண்டு முதல் 10 நாள் நடத்தப்படும் என உயர் நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னை வேங்கைவாசல் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மிகவும் பழமையானது. கோயில் நிர்வாகம், அறங்காவலர்களால் கோயிலின் வழிபாட்டு நிகழ்வுகளில் எத்தகைய மாற்றங்களையும் கொண்டு வர முடியாது. ரமேஸ்வரம் கோயிலில் பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா வைகாசி மாதத்தில் ஜூன் 3 முதல் 13 வரை திருவிழா நடைபெறும் என கோயில் காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கோயில் நிர்வாகம் பிரம்மோற்சவ விழா 3 நாள் மட்டும் நடைபெறும் என அறிவித்துள்ளது. எனவே ராமேஸ்வரம் கோயிலில் பிரம்மோற்சவ விழாவை 10 நாள் கொண்டாட உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட்…
விருதுநகர்: “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ‘யார் அந்த சார்’ என்பதை கண்டுபிடிக்க காவல் துறை தவறியுள்ளது” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார். மதுரை திருப்பங்குன்றத்தில் இம்மாதம் 22ம் தேதி பாஜக சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. அதையொட்டி, விருதுநகர் கிழக்கு, மேற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் சூலக்கரையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசுகையில், “இந்த மாநாட்டில் விருதுநகர் கிழக்கு மாவட்டத்திலிருந்து 20 ஆயிரம் பேரும், மேற்கு மாவட்டத்திலிருந்து 16 ஆயிரம் பேரும் பங்கேற்க வேண்டும். மற்ற மாவட்டங்களைவிட விருதுநகர் மாவட்டத்திலிருந்து அதிகமானோர் பங்கேற்பர். விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெறும். படிப்படியாக நமது வெற்றி நெருங்கிக் கொண்டே இருக்கிறது. தேசிய ஜனநாயக ஆட்சி தமிழகத்தில் மலருவதற்கு இந்த மாநாடு முன்னோட்ட மாக அமைய வேண்டும். வரும் சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் நாம்…
புரோஸ்டேட் புற்றுநோய் என்பது ஒரு ஆக்கிரமிப்பு புற்றுநோயாகும், இது புரோஸ்டேட் சுரப்பியில் உருவாகிறது, இது ஆண் இனப்பெருக்க அமைப்பில் ஒரு சிறிய சுரப்பி, இது விந்துக்கு திரவத்தை உற்பத்தி செய்கிறது. தோல் புற்றுநோய்களுக்குப் பிறகு, ஆண்களில் இது மிகவும் பொதுவான புற்றுநோயாகும். எல்லா புற்றுநோய்களிலும் இருப்பதைப் போலவே, அதை ஆரம்பத்தில் பிடிப்பதும் சிகிச்சையில் நிறைய வித்தியாசங்களை ஏற்படுத்தும், மேலும் வாழ்க்கைக்கும் இறப்புக்கும் இடையிலான எல்லை நிர்ணயிப்பாளராக இருக்கலாம். புற்றுநோயின் தீவிரத்தன்மைக்கு வரும்போது, புரோஸ்டேட் புற்றுநோயை மதிப்பிடுவதற்கு மருத்துவர்கள் பயன்படுத்தும் ஒரு முக்கியமான கருவி க்ளீசன் மதிப்பெண். இந்த மதிப்பெண் புற்றுநோய் எவ்வளவு ஆக்கிரமிப்பு என்பதை தீர்மானிக்க உதவுகிறது மற்றும் சிகிச்சை முடிவுகளை வழிநடத்துகிறது. ஆனால் க்ளீசன் மதிப்பெண் என்றால் என்ன, அது எவ்வாறு உதவுகிறது? பார்ப்போம் …க்ளீசன் மதிப்பெண் என்றால் என்ன?க்ளீசன் மதிப்பெண் என்பது ஒரு நுண்ணோக்கின் கீழ் புற்றுநோய் செல்கள் எவ்வாறு தோற்றமளிக்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டு புரோஸ்டேட் புற்றுநோயை…
ஜெய்ப்பூர்: பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததற்காக ராஜஸ்தான் அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார். ஜெய்சால்மரில் உதவி நிர்வாக அதிகாரியாக இருந்த ஷகூர் கான், முக்கியமான ஆவணங்களை ஐஎஸ்ஐ ஏஜென்டுகளுக்கு அனுப்பிய புகாரில் கைதாகியுள்ளார் ஜெய்சால்மரில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவி நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்த ஷகூர் கான் என்பவரை, உளவு பார்த்த கடுமையான குற்றச்சாட்டில் ராஜஸ்தான் உளவுத் துறை கைது செய்தது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ முகவர்களுடன் முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ராஜஸ்தான் காவல் துறைத் தலைவர் (சிஐடி) விஷ்ணு காந்த் குப்தா, ஷகூர் கான் நீண்ட காலமாக கண்காணிப்பில் இருந்ததை உறுதிப்படுத்தினார். இது குறித்து பேசிய அவர், “கண்காணிப்பின்போது, பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரியும் சில நபர்களுடன், குறிப்பாக அஹ்சன்-உர்-ரஹீம் என்கிற டேனிஷ் மற்றும் சோஹைல் கமர் ஆகியோருடன் ஷகூர் கான் தொடர்ந்து தொடர்பில் இருந்தது தெரியவந்தது. டேனிஷ் ஏற்கெனவே இந்திய அரசாங்கத்தால் ‘விரும்பத்தகாத நபர்’ என்று…
மதுரை: அகஸ்தியர் கோயில், சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்லும் உள்ளூர் மக்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “நெல்லை மாவட்டத்தில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ள பகுதியில் புகழ் பெற்ற அகஸ்தியர் திருக்கோயில் மற்றும் சொரிமுத்து அய்யனார் திருக்கோயில்கள் உள்ளன. அகஸ்தியர் கோயிலின் அருகே அகஸ்தியர் அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு பொதுமக்கள், பக்தர்கள் என பலரும் குளிப்பதற்காக வருகின்றனர். இந்த அருவியில் குளிக்கவும், வாகனங்கள் நிறுத்தவும் தமிழ்நாடு வனத்துறையின் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உள்ளாட்சி நிர்வாகம் தான் அருவியில் குளிக்கவும், வாகனங்கள் நிறுத்தவும் கட்டணம் வசூலிக்க முடியும். அதற்கு பதிலாக வனத்துறை சார்பில் கட்டணம் வசூலிப்பதை ஏற்க முடியாது. மேலும், உள்ளூர் மக்களிடமும் கட்டணம் வசூலிக்கின்றனர். இது சட்டவிரோதம்.…
போபால்: இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த மோதலின்போது, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசியில் அழைத்துப் பேசியதும் பிரதமர் நரேந்திர மோடி சரணடைந்துவிட்டார் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் நடந்த காங்கிரஸ் தொண்டர்கள் மாநாட்டில் உரையாற்றிய ராகுல் காந்தி, “நாட்டில் தற்போது சித்தாந்தப் போர் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் காங்கிரஸும் அரசியலமைப்பும் இணைந்து நிற்கின்றன. மறுபுறம் அரசியலமைப்பை முடிவுக்குக் கொண்டுவர விரும்பும் பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் உள்ளன. படிப்படியாக இந்தியாவின் அனைத்து நிறுவனங்களையும் அவர்கள் கைப்பற்றி, நாட்டுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறார்கள். இரண்டாவது போர் சமூக நீதிக்கானது. மக்களவையிலும், மாநிலங்களவையிலும் சாதிவாரி கணக்கெடுப்பை நிறைவேற்ற நான் பாடுபடுவேன் என்று மக்களவையில் தேசத்திற்கு உறுதியளித்தேன். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் அவர்கள் மீது கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் போதும், அவர்கள் பயப்படுவார்கள். ட்ரம்ப் போன் செய்து, ‘நரேந்திரா, சரணடை’…
சென்னை: “திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் உயர் கல்வித் துறை நிர்வாகச் சீர்கேட்டாலும், நிதிப் பற்றாக்குறையாலும், துணை வேந்தர் நியமனங்கள் தாமதத்தினாலும், காலிப் பணியிடங்களை நிரப்பாததாலும் மற்றும் பிற காரணங்களாலும் உருக்குலைந்துள்ளது” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021-ல் நிறைவேற்ற முடியாத 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்து, பின்புற வாசல் வழியே ஆட்சியைப் பிடித்து, விளம்பர ஆட்சி நடத்தி வரும் திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியின் கீழ் உள்ள உயர் கல்வித் துறையின் நிர்வாகத் திறமையின்மையால் பல்கலைக்கழகங்களும், அரசு கல்லூரிகளும் கடுமையான பின்னடைவை சந்தித்து வருகின்றன. பல பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பதவிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக இருக்கும் அவலம், பேராசிரியர்களுக்கு ஊதியமின்மை, பணி நிரந்தரமின்மை, நிதிப் பற்றாக்குறை, முறைகேடுகள் மற்றும் மாணவர் சேர்க்கை குறைவு போன்ற முக்கிய பிரச்சினைகளால் தமிழக உயர் கல்வித் துறை சீரழிந்துள்ளது என்று…
வெறும் ஐந்து வினாடிகளில், மூன்று பிச்சைக்காரர்களில் எது வறியப்படவில்லை என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியுமா? நேர அழுத்தத்தின் கீழ் இத்தகைய சவால்களை தீர்க்கும் திறனால் உயர் நுண்ணறிவு மற்றும் கடுமையான கருத்து நிரூபிக்கப்படுகிறது. நீங்கள் பணிக்கு வருகிறீர்களா? தொடங்குவோம்! இன்றைய பணி, படத்தை உன்னிப்பாக படித்து, பிச்சைக்காரர்களாக நடித்த மூன்று பேரில் வறியவர்களை அடையாளம் காண்பது.அவர்கள் உண்மையில் யார் என்பதை சுட்டிக்காட்டக்கூடிய எந்தவொரு குறிப்புகளுக்கும் அவர்களின் சூழல், ஆடை மற்றும் பாகங்கள் கவனமாக ஆராயுங்கள்.இந்த ப்ரைண்டீசரைக் கண்டுபிடிக்க உங்களுக்கு ஐந்து வினாடிகள் மட்டுமே உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே வேகமாக நகர்த்தவும்!இது போன்ற புதிர்கள் அதிக ஐ.க்யூ கள் மற்றும் தீவிரமான அவதானிப்பு திறன்களைக் கொண்டவர்களால் எளிதில் தீர்க்கப்படுகின்றன.இந்த நபர்கள் பொதுவாக வலுவான விமர்சன சிந்தனை, தர்க்கரீதியான பகுத்தறிவு மற்றும் நேர உணர்திறன் முடிவெடுக்கும் திறன்களைக் கொண்டுள்ளனர்.சிக்கலான சூழ்நிலைகளில் வேகத்துடன் வடிவங்கள் மற்றும் முரண்பாடுகளை அவர்கள் கண்டுபிடிக்க முடிகிறது.நீங்கள் அதை…
நெல்லை: வாக்காளர்களுக்கு பெட்டி பெட்டியாக பணம் கொடுத்தாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக மாவட்டந்தோறும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியது: “சபரிமலை கோயிலுக்குச் செல்லும் தீவிர பக்தராக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு விளங்குகிறார். ஆனால், அவர் இருக்கும் இடம் சரியானதாக இல்லை. அதனால்தான் முருக பக்தர்கள் மாநாட்டை ‘சங்கிகள் மாநாடு’ என்று அவர் விமர்சனம் செய்து வருகிறார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கை சிபிஐ விசாரித்திருக்க வேண்டும். அப்போது தான் யார் அந்த சார் ? என்பதற்கான விடை கிடைத்திருக்கும். இந்த வழக்கில் குற்றப்…