Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, December 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»”மோதல் தவிர்க்கப்பட வேண்டும்” – ஐநா பொதுச் செயலாளரிடம் பாக். பிரதமர் வேண்டுகோள்
    உலகம்

    ”மோதல் தவிர்க்கப்பட வேண்டும்” – ஐநா பொதுச் செயலாளரிடம் பாக். பிரதமர் வேண்டுகோள்

    adminBy adminMay 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ”மோதல் தவிர்க்கப்பட வேண்டும்” – ஐநா பொதுச் செயலாளரிடம் பாக். பிரதமர் வேண்டுகோள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    இஸ்லாமாபாத்: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதல் தவிர்க்கப்பட வேண்டும் என்று ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெசிடம், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ராணுவ ரீதியாக பதிலடி கொடுப்பதற்கு ஏற்ப இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி கொடுத்துள்ளார். இதனால், பாகிஸ்தான் அச்சமடைந்துள்ளது.

    இந்த விவகாரத்தில் சுதந்திரமான, வெளிப்படையான, நடுநிலையான மற்றும் நம்பகமான விசாரணைக்குத் தயார் என ஏற்கனவே தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்த விசாரணையில் இணைய சீனா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

    இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து 2வது முறையாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெசிடம், ஷெபாஸ் ஷெரீப் தொலைபேசி மூலம் பேசி உள்ளார். இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், “பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் உடன் திங்களன்று தெற்காசியாவில் நிலவும் சூழ்நிலை குறித்து விவாதித்தார்.

    ஒரு வாரத்திற்குள் இரு தலைவர்களுக்கும் இடையேயான இரண்டாவது தொலைபேசி உரையாடல் இதுவாகும். ஐ.நா. பொதுச்செயலாளரின் தொடர்ச்சியான ஈடுபாடு மற்றும் தொடர்பு முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் ஷெரீப், பதற்றத்தைத் தணிப்பதும், எந்தவொரு மோதலையும் தவிர்ப்பதும் அவசியம் என கூறினார்.

    சுதந்திரமான, வெளிப்படையான, நடுநிலையான மற்றும் நம்பகமான விசாரணையை மீண்டும் வலியுறுத்தும் அதே வேளையில், இந்தியா இன்னும் எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை என்றும், தொடர்ந்து ஆத்திரமூட்டும் பேச்சுக்கள் மற்றும் போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் தனது கவலையை வெளிப்படுத்தினார்.

    பாகிஸ்தான் தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் உறுதியை பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் வலியுறுத்தினார்.

    பாகிஸ்தானின் பொருளாதார நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் சர்வதேச நிதி நிறுவனங்களை அரசியலாக்க இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்தும் பிரதமர் ஷெரீப் தனது தீவிர கவலையை வெளிப்படுத்தினார்.

    தெற்காசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான தனது முயற்சிகள் குறித்து பிரதமரிடம், ஐநா பொதுச் செயலாளர் விளக்கினார். மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினருடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    கலிபோர்னியாவில் இந்திய வம்சாவளி நபர் மீது கொலைக் குற்றச்சாட்டு; 41 வயதான ஒரு பெண்ணைக் கொல்வதற்கு முன்பு டெஸ்லாவை மணிக்கு 150 மைல் வேகத்தில் ஓட்டிக்கொண்டிருந்தார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 8, 2025
    உலகம்

    ஹார்வர்ட் பேராசிரியர் 3I/ATLAS ஒரு ‘இதயத் துடிப்பு’ போன்ற துடிப்பை வெளியிடுவதாகக் கூறுகிறார், இது அன்னிய தொழில்நுட்பத்தைக் குறிக்கும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 8, 2025
    உலகம்

    பைபிள் உடன்படிக்கை முறிந்ததா? கானா மனிதன் நவீன நோவாவின் பேழையை கட்டுகிறான், 2025 கிறிஸ்துமஸ் வெள்ளம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 8, 2025
    உலகம்

    மர்மமான ஆழ்கடல் ‘Bloop’ விஞ்ஞானிகள் தாங்கள் இறுதியாக மாபெரும் Megalodon கண்டுபிடிக்க வேண்டும் என்று நம்ப வைத்தது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 8, 2025
    உலகம்

    அமெரிக்க வீட்டில் தீ சோகம்: அல்பானி தீ விபத்தில் இரண்டாவது இந்தியர் பலத்த தீக்காயங்களுடன் இறந்தார்; விசாரணை நடந்து வருகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 7, 2025
    உலகம்

    ‘அவர்களுக்கு எந்த பயமும் இல்லை’: பிரிஸ்பேனில் உள்ள இந்திய வம்சாவளி தம்பதியினர் கத்தியை ஏந்திய கொள்ளையர்கள் வீட்டிலிருந்து 4 மெர்சிடிஸ், 1 போர்ஷை திருடியதாகக் கூறுகிறார்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • H3N2 இன்ஃப்ளூயன்ஸா விளக்கப்பட்டது: காரணங்கள், அறிகுறிகள், அபாயங்கள் மற்றும் ஏன் இந்த காய்ச்சல் திரிபு கடுமையாக தாக்குகிறது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • குறைந்த மன அழுத்தம் மற்றும் சிறந்த மன ஆரோக்கியத்துடன் தொடர்புடைய 7 பொழுதுபோக்குகளை அமெரிக்க மருத்துவர் பட்டியலிட்டுள்ளார்
    • ஊட்டச்சத்து ஈஸ்ட் உங்கள் வைட்டமின் பி 12 குறைபாட்டை இயற்கையாக சரிசெய்ய முடியுமா? நிபுணர்கள் எடை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஒளியியல் மாயை: லேசர்-கூர்மையான ஃபோகஸ் மற்றும் 20/20 கண்பார்வை கொண்ட ஒருவரால் மட்டுமே மறைந்திருக்கும் 5 பொருட்களைக் கண்டறிய முடியும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சாரா டெண்டுல்கர் குடும்பத்தின் உடற்தகுதி தத்துவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்: நீங்கள் மாற்றிக்கொள்ளக்கூடிய அடிப்படை அணுகுமுறை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.