Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, January 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»மகளிர் மட்டும்: ப்ளூ ஆரிஜின் நிறுவன விண்கலனில் விண்வெளி உலா சென்ற பெண் பிரபலங்கள்
    உலகம்

    மகளிர் மட்டும்: ப்ளூ ஆரிஜின் நிறுவன விண்கலனில் விண்வெளி உலா சென்ற பெண் பிரபலங்கள்

    adminBy adminApril 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மகளிர் மட்டும்: ப்ளூ ஆரிஜின் நிறுவன விண்கலனில் விண்வெளி உலா சென்ற பெண் பிரபலங்கள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    டெக்சாஸ்: ஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின் மூலம் பெண் பிரபலங்கள் மட்டும் அடங்கிய குழு விண்வெளிக்கு சென்று வந்துள்ளனர். இதில் பெசோஸின் காதலியான லாரன் சான்செஸும் பயணித்தார்.

    அவருடன் விமானியும் முன்னாள் பத்திரிகையாளருமான சான்செஸ், பாடகர் மற்றும் பாடலாசிரியர் கேட்டி பெர்ரி மற்றும் ‘சிபிஎஸ் மார்னிங்ஸ்’ இணை தொகுப்பாளர் கெயில் கிங், திரைப்பட தயாரிப்பாளர் கெரியான் ஃப்ளின், முன்னாள் நாசா பொறியாளர் ஆயிஷா போவ், விஞ்ஞானி அமண்டா ஆகியோர் விண்வெளிக்கு பயணித்தனர். இந்த நேரப்படி ஏப்.14 மாலை 7 மணி அளவில் இந்த விண்வெளி பயணம் மேற்கொள்ளப்பட்டது.

    அடுத்த 2 மாதங்களில் லாரன் சான்செஸை திருமணம் செய்ய உள்ளார் பெசோஸ். இந்த நிலையில் விண்வெளி பயணம் திட்டமிடப்பட்டது. மேற்கு டெக்சாஸில் இருந்து நியூ ஷெப்பர்ட் விண்கலன் மூலம் வெறும் சில நிமிடங்கள் மட்டுமே இந்த பயணம் திட்டமிடப்பட்டது. பயணத்தின் மொத்த நேரம் 10 நிமிடம் 21 விநாடிகள் என ப்ளூ ஆரிஜின் தெரிவித்துள்ளது. கார்மன் லைன் வரை சென்று இந்த விண்கலம் பூமி திரும்பி உள்ளது. இந்தப் பயணத்தின் போது விண்வெளியில் மிதந்து ஸீரோ கிராவிட்டியை ஆறு பேரும் உணர்ந்தனர்.

    மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 11-வது பயணமாக இது ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்துக்கு அமைந்தது. கடந்த 2021-ல் முதல்முறையாக விண்வெளி சுற்றுலா பயணத்தை தொடங்கியது ப்ளூ ஆரிஜின் நிறுவனம். கடந்த 60+ ஆண்டுகளில் முழுவதும் மகளிர் மட்டுமே பயணித்த இரண்டாவது விண்வெளி பயணமாக இது அமைந்துள்ளது. இதற்கு முன்பு ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி வீராங்கனை வாலண்டினா தெரஷ்கோவா, கடந்த 1963-ல் மூன்று நாட்கள் விண்வெளியில் செலவிட்டிருந்தார். அதில் அவர் மட்டுமே பயணித்திருந்தார்.

    இந்த பயணத்துக்கான செலவு குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. மேலும், இதில் யார் எவ்வளவு பங்கு வழங்கினார்கள் என்ற விவரமும் வெளியிடப்படவில்லை. சுமார் 700-க்கும் மேற்பட்ட தனிநபர்கள் விண்வெளிக்கு இதுவரை சென்று வந்துள்ளது. இதில் பெண்களின் பங்கு 15 சதவீதம். விண்வெளி சுற்றுலா மூலம் வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    டெக்சாஸ் ஏஜி வேட்பாளரின் இந்திய-விரோத இடுகை பின்வாங்குகிறது சமூகக் குறிப்பு அவரது உயர் நன்கொடையாளர்களில் பாகிஸ்தானிய மோசடி செய்பவர் உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 22, 2026
    உலகம்

    ‘உங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்லுங்கள்’: 8 வயது டெக்சாஸ் சிறுவனின் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கொடுமைகளுக்குப் பிறகு கண்ணீர் சிந்தும் வீடியோ வைரலாகும் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 22, 2026
    உலகம்

    ‘கடவுள் மீதான விரோதத்தின் காரணமாக நான் ஜனநாயகக் கட்சியை விட்டு வெளியேறினேன்’: மின்னசோட்டா தேவாலயத்திற்குள் ICE எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை DNI துளசி கப்பார்ட் வெடிக்கிறார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 22, 2026
    உலகம்

    ஆதார் அமெரிக்க எஸ்எஸ்என் விவாதத்தில் நுழைகிறது: தீவிர வலதுசாரி அரசியல் எழுத்தாளர் கர்டிஸ் யர்வின் இந்தியாவுக்கு எதிரான அவதூறுடன் பின்னடைவைத் தூண்டுகிறார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 22, 2026
    உலகம்

    இந்தியாவில் பிறந்த ஆர்ஏஎஸ் தங்கப் பதக்கம் வானியற்பியல் வல்லுநர் மற்றும் நாராயண மூர்த்தியின் மைத்துனர் ஸ்ரீ குல்கர்னி யார்? | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 21, 2026
    உலகம்

    புதிய SNL ஸ்கெட்ச்சில் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் தொடர்ச்சிகள், ஸ்பின்-ஆஃப்கள் மற்றும் எபிசோட் 9 ‘கன்ஃபார்மிட்டி கேட்’ ஆகியவற்றைப் பெறுகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆடைகளில் இருந்து மேக்கப் கறையை நீக்குவது எப்படி: வேலை செய்யும் எளிய தந்திரங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பயனர் தரவுகளின் அடிப்படையில், உலகெங்கிலும் உள்ள 10 நகரங்கள் கடுமையான மாசுபாட்டை எதிர்கொள்கின்றன
    • ‘மகாராணி ஆஃப் பரோடா’ ரதிகராஜே கெய்க்வாட்டின் ராயல் ப்ளஷ்-பிங்க் புடவை அதன் மிகச்சிறந்த அமைதியான ஆடம்பரமானது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உயிரியல் ரீதியாக தனக்குச் சொந்தமில்லாத குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு பெண் IVF கிளினிக்கைப் பொறுப்பேற்றுள்ளார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நாசா விண்வெளி வீரர் சுனி வில்லியம்ஸ் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெற்றார்: அவர் என்ன சம்பாதித்தார், அவரது ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்குப் பிந்தைய பலன்கள் விளக்கப்பட்டுள்ளன | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.