Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, January 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»பஹல்காம் பயங்கரம் | ”முடிந்த அனைத்து உதவிகளையும் இந்தியாவுக்கு வழங்குவோம்”: அமெரிக்க சபாநாயகர்
    உலகம்

    பஹல்காம் பயங்கரம் | ”முடிந்த அனைத்து உதவிகளையும் இந்தியாவுக்கு வழங்குவோம்”: அமெரிக்க சபாநாயகர்

    adminBy adminMay 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பஹல்காம் பயங்கரம் | ”முடிந்த அனைத்து உதவிகளையும் இந்தியாவுக்கு வழங்குவோம்”: அமெரிக்க சபாநாயகர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வாஷிங்டன்: பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவளிக்க அனைத்து விதமான முயற்சிகளையும் அமெரிக்க மேற்கொள்ளும் என்று அந்நாட்டு பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு இந்தியா பல வழிகளில் மிகவும் முக்கியமான நட்பு நாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் 22ம் தேதி நடந்த கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பாக பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டி அந்நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா கடுமையாக்கி வரும் நிலையில் அமெரிக்க சபாநாயகர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “இந்தியா பல வழிகளில் அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமான கூட்டாளி என்று நான் கருதுகிறேன். இந்தியா பயங்கரவாதத்துக்கு எதிராக நிற்க வேண்டும். அந்த முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் முடிந்த அனைத்தையும் செய்வோம். தீவிரவாதத்துக்கு எதிரான போரட்டத்துக்கு அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் இந்தியாவுக்குத் தேவையான ஆற்றல் மற்றும் வளங்களை வழங்கும்.

    ட்ரம்ப் நிர்வாகம் இந்தியா அமெரிக்கா உறவின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளது. அதேபோல், பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்த முக்கியத்துவத்தையும் உணர்ந்துள்ளது. அந்த அச்சுறுத்தல் அதிகரிக்கும் போது அதற்கு எதிரான போராட்டத்துக்கு உதவ ட்ரம்ப் நிர்வாகம் அதில் அதிக கவனம் செலுத்தி அதற்காக அதிக வளங்களையும், நேரத்தையும் செலவழிக்கும் என்பது எனது நம்பிக்கை.” இவ்வாறு அவர் பேசினார்.

    கடந்த மாதம் 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் உளவு அமைப்பு தேவையான உதவிகளை செய்து கொடுத்து இருப்பதும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்தத் தாக்குதலைக் கண்டித்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய மக்களுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது. பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு எங்களின் முழு ஆதரவும், அனுதாபங்களும் உண்டு” என்று தெரிவித்திருந்தார்.

    தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, “இரு நாடுகளுக்கும் இடையிலான சூழலை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டு அரசுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். இந்தியா – பாகிஸ்தான் இடையே உரிய தீர்வு காண அமெரிக்கா ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலை அமெரிக்கா வன்மையாக கண்டிக்கிறது. இந்த விஷயத்தில் நாங்கள் இந்தியாவின் பக்கம் நிற்கிறோம்” என அமெரிக்க அரசு துறையின் செய்தித் தொடர்பாளர் கூறியிருந்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    பிரேக்கிங் ரொட்டி: ICE முகவர்கள் மெக்சிகன் உணவகத்தில் சாப்பிடுகிறார்கள், பின்னர் ஊழியர்களை கைது செய்கிறார்கள் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 16, 2026
    உலகம்

    “நிராகரிக்கவோ உறுதிப்படுத்தவோ இல்லை”: 3I/ATLAS தோற்றத்தில் பதிவுகள் கோரிக்கைக்கு சிஐஏ அரிய பதிலை வழங்குகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 16, 2026
    உலகம்

    ‘எனக்கு போதுமான திறமை உள்ளது’: கனடாவில் பணிநீக்கம் செய்யப்பட்ட நபர் டிக்டோக்கில் ‘இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்’ என்று பதிலளித்தார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 16, 2026
    உலகம்

    வாஷிங்டனில் கரை ஒதுங்கிய பல தசாப்தங்கள் பழமையான எலும்புக்கூடு முன்னாள் ஓரிகான் மேயர் என அடையாளம் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 15, 2026
    உலகம்

    ‘எல்லா இடங்களிலும் இரத்தம் இருந்தது’: இந்திய வம்சாவளி டிரக் டிரைவர் வீட்டிற்கு வெளியே மெல்போர்னில் தாக்கப்பட்டார், போலீசார் அதை ‘இலக்கு தாக்குதல்’ என்று அழைக்கிறார்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 15, 2026
    உலகம்

    டாக்டர் நிஷா வர்மா யார்? அமெரிக்க செனட்டர் இந்திய வம்சாவளி மருத்துவரிடம் ஆண்கள் கர்ப்பமாக முடியுமா என்று கேட்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உங்கள் சமையலறையில் அலுமினியத் தாளைப் பயன்படுத்த 5 சிறந்த வழிகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கடலின் ‘மரண ஏரி’ என்றால் என்ன? கடல்வாழ் உயிரினங்கள் நீருக்கடியில் உள்ள கொடிய இடங்களுக்குள் நுழைந்தால் என்ன நடக்கும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • குளிர்காலத்தில் கிர் தேசிய பூங்கா: காலை மற்றும் மாலை சஃபாரி, முன்பதிவு விவரங்கள் மற்றும் விலைகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிரேக்கிங் ரொட்டி: ICE முகவர்கள் மெக்சிகன் உணவகத்தில் சாப்பிடுகிறார்கள், பின்னர் ஊழியர்களை கைது செய்கிறார்கள் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ராபின் சர்மா கடினமான காலங்களில் வழிநடத்த 5 விதிகளை வெளிப்படுத்துகிறார்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.